
மதநல்லிணக்கத்துக்கும் , இந்து -முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் சிறந்த உதாரணமாக கேரள மாநிலம், மலப்புரத்தில் சிறந்த நிகழ்வு நடந்துள்ளது.
ராம்ஜான் காலத்தில், முஸ்லிம்களுக்கு, இந்துக்கள், கோயில்லி வைத்து இப்தார்விருந்தை அளித்துள்ளனர். அதை முஸ்லிம்களும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டனர்.
மலப்புரம் அருகே உள்ளது வெட்சிச்சிரா கிராமம். இங்கு லட்சுமி நரசிம்ம மூர்த்தி விஷ்னு கோயில் உள்ளது. பெரும்பான்மையாக இங்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அதிகமாக வாழ்கிறார்கள்.
இந்த கோயிலில்தான் வியாழக்கிழமை 300-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இப்தார் விருந்து அளிக்கப்பட்டது.
இந்த கோயிலில் புதுபிக்கும் பணிகள் கடந்த மே 29ந்தேதி முதல் நடந்து வருகிறது. இந்த கோயிலின் புத்தாக்க பணிகளுக்கு தேவையான பணத்தில் தங்களால் இயன்ற அளவை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர்.அதுமட்டும் அல்லாமல், இந்த கிராமத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதால் மதநல்லிணக்கத்தை வௌிக்காட்டும் விதமாக இந்த விருந்து நடந்துள்ளது.
இது குறித்து கோயிலின் நிர்வாகச் செயலாளர் பி.டி. மோகணன் கூறுகையில், “ மத நல்லிணக்கத்துக்கு உகந்த சூழலுடன் நாங்கள் வளர்ந்து வருகிறோம். எங்களைப் பொருத்தவரை மனிதநேயம் மட்டுமே மதம் இல்லை. ஒவ்வொருத்தருக்கும்அவர்களின் மதத்தையும், சாதியையும் பின்பற்ற உரிமை உண்டு.அதற்காக மற்ற மதத்தினருடன் நட்பாக இருக்கக் கூடாது என்பதல்ல.மற்ற மதத்தினரைச் சேர்ந்த மக்களை வரவேற்கும் போது நாங்கள் எங்கள் இதயத்தை பூட்டிவைக்க கூடாது. இந்த விருந்துக்கு முன்கூட்டியே கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததால், அனைவரும் எந்தவிதமான வெறுப்பின்றி வந்து சாப்பிட்டு, மனநிறைவுடன் சென்றனர் ’’ என்றார்.
இந்த கோயிலில் 400-க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களை அமரவைக்க இடம் போதாது என்பதால், கோயிலுக்கு சொந்தமான மம்மு மாஸ்டர் என்ற பிரதான வளாகத்தில் இப்தார் விருந்து நடத்தப்பட்டது. முஸ்லிம் மக்களுக்கு கேரளாவின் பாரம்பரிய ஓணம் சத்யா விருந்து, பாரம்பரிய கேரள சாப்பாடு ஆகிய பரிமாறப்பட்டது.