மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு - மருத்துவமனையில் அனுமதி

Asianet News Tamil  
Published : Jun 02, 2017, 03:49 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு - மருத்துவமனையில் அனுமதி

சுருக்கம்

menaka gandhi hospitalised due to health issues

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்திக்கு ஏற்பட்ட்ட திடீர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் மேனகா காந்தி 1982 அரசியலுக்கு உள்ளே வந்தார். இதனால் இந்திரா காந்திக்கும் இவருக்கும் வெளிப்படையான மோதல்கள் ஏற்பட்டன.

இதையடுத்து 1983-ல் "சஞ்சய் விசார் மஞ்ச்" என்ற அமைப்பு ஒன்றைத் துவக்கினார். 1988-ல் ஜனதா தளத்தில் இணைந்து 1989 வரை அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்தார்.

1989-ல் தனது முதல் தேர்தல் வெற்றியைக் கண்ட இவர் வி. பி. சிங் அரசில் 1991 வரை சுற்றுச்சூழல்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

1996-இலும் 1999-இலும் உத்திரப் பிரதேசத்திலுள்ள பிலிபிட் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பாஜக அரசில் சமுதாய நலத்துறை துணை அமைச்சராகவும் பண்பாட்டுத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தார்.

2004 பொதுத்தேர்தலில் பாஜக உறுப்பினராக பிலிபிட் தொகுதியிலிருந்து இவர் மீண்டும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தனது சொந்த தொகுதியான பிலிபிட் தொகுதிக்கு இன்று காலை மத்திய அமைச்சர் மேனகா காந்தி வந்துள்ளார்.

அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார்.

இதையடுத்து அவர் பிலிபிட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்

PREV
click me!

Recommended Stories

மரண தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்.. உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சூளுரை!
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!