
உத்தர்கண்டில் உள்ள ராம் நகரில், கர்ஜியா எனும் இந்து கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு முஸ்லிம் இளைஞர் ஒருவர் தனது இந்து தோழி ஒருவருடன் சென்றிருக்கிறார். அவரை அடையாளம் கண்ட பக்தர்கள், முஸ்லீமான அந்த இளைஞர் இந்து கோவிலுக்குள் செல்லக்கூடாது. எனக்கூறி அவரை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். சிலர் அவரை தாக்கத்தொடங்கிவிட்டனர்.
அப்போது அங்கு வந்த ஒரு சீக்கிய காவல்துறை அதிகாரி, அந்த இளைஞனை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தார். அவரது இந்த செயல் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி இருந்தது.
அந்த வீடியோவை பார்த்த மக்கள் அந்த சீக்கிய போலீஸ் அதிகாரியை வெகுவாக பாராட்டியிருந்தனர். மதச்சார்பற்ற ஒரு நாட்டில், இவ்வாறு வேற்றுமை பாராட்டி நடந்துகொண்ட பக்தர்களை கண்டித்தும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர் மக்கள்.
மேலும் அந்த போலீஸ் அதிகாரி உத்தர்கண்டை சேந்த சுகந்தீப் சிங் என்ற தகவல் அறிந்து, அவரிடம் இந்த சம்பவம் பற்றி கேட்டபோது, அந்த இளைஞரை காப்பது என் கடமை. வேறு எந்த மதத்தை சேர்ந்தவராயினும் நான் இப்படி தான் கப்பாற்றி இருப்பேன். அதுவே என் கடமை என கூறியிருக்கிறார். இதனால் சுகந்தீப் சிங்கிற்க்கு என இப்போது ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது