
சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ காட்சி, மிகவும் வைரலாகி இருக்கிறது. அதற்கு காரணம் அதில் நடந்திருக்கும் தனிநபர் உரிமை மீறல் தான்.
ரயிலி பயணம் செய்து கொண்டிருக்கும் போது, அதில் சக பயணி ஒருவரிடம் சில நபர்கள் தொடர்ந்து கேள்வி கேட்கின்றனர். அப்பாவியான அந்த நபர் சில கேள்ல்விகளுக்குப் பதில் தெரியாததால் சிரித்து சமாளிக்க முயலுகிறார்.
அந்த இயலாமையை கண்ட பிறகும் கூட அவரிடம் மென்மேலும் கேள்விக் கணைகளை தொடுக்கின்றனர் சுற்றி இருப்பவர்கள். மேற்கு வங்காளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த ரயிலில், தனியாக இருந்த அந்த பயணியிடம், அவரை சுற்றி இருந்த 4 பேர் கேள்வி கேட்டதோடு நில்லாமல் அவரை அடிக்கவும் செய்திருக்கின்றனர்.
தேசிய கீதம் பற்றியும் பிரதமர் மோடி பற்றியும் அவர்கள் கேட்ட கேள்விக்கு, அந்த நபர் பதிலளிக்கவில்லை என்பதற்காக அவரை அடித்திருக்கின்றனர்.
இந்த செயலால் அதிர்ந்த சகபயணி ஒருவர் இந்த சம்பவம் கூறித்து போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். மேலும் ”பங்களா சன்க்ரிதி மஞ்சா” எனும் என்.ஜி.ஓ அமைப்பு கொடுத்த புகாரின் பேரில், இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடை பெற்று வருகிறது.