சொத்துக்குவிப்பு வழக்கில் மனைவியுடன் அலையும் முதல்வர் - டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்

First Published May 22, 2017, 5:07 PM IST
Highlights
himachal pradesh CM in Property accumulation case


இமாச்சலப்பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் அவர், தன்னுடைய மனைவியுடன் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இமாசல பிரதேச முதல்-அமைச்சர் வீரபத்ரசிங், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்த 500 பக்க குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்தது. அதில் வீரபத்ரசிங் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.10 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

சி.பி.ஐ. தாக்கல் செய்த இறுதி அறிக்கையில் வீரபத்ரசிங் மற்றும் 8 பேர் மீது ஊழல் மற்றும் போலியாக ஆவணங்கள் தயாரித்தல் போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தனர். எல்.ஐ.சி. முகவரான ஆனந்த் சவுகான் (தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.) மீதும் குற்றம் சாட்டப்பட்ட இருந்தது.

டெல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, முதல் அமைச்சர் வீரபத்ரசிங் அவருடைய மனைவி பிரதிபாசிங் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.

வீரபத்ரசிங் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனவுக்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்கும்படி, சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்க விசாரணையை மே மாதம் 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தது. ஏற்கனவே இந்த வழக்கில் வீரபத்ரசிங்கை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!