
நாட்டில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய திட்டம் ஏதும் இல்லை எனவும், கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகள் பிரச்னைக்கு நீண்ட கால தீர்வாக அமையாது எனவும் விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் சிலநாட்களுக்கு முன்பு பிரதமரை சந்தித்து மனு அளித்து வந்தார்.
மேலும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமரை சந்தித்து விவசாயிகளின் பிரச்சனை குறித்து ஆலோசிக்க நேரம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுநாட்டில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய திட்டம் ஏதும் இல்லை எனவும், கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகள் பிரச்னைக்கு நீண்ட கால தீர்வாக அமையாது எனவும் தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளுக்கான இடுபொருள்களின் விலையை குறைப்பது மட்டுமே தீர்வாக அமையும் எனவும், விலை பொருட்களுக்கான சந்தையை உருவாக்குவதும் தீர்வாக அமையும் எனவும் ராதாமோகன் சிங் தெரிவித்தார்.