இனி பெண்களின் காலிலேயே 'கரன்ட் ஷாக்' ... சில்மிஷம் செய்பவர்களுக்கு ஆப்பு...!!

 
Published : May 22, 2017, 04:20 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
இனி பெண்களின் காலிலேயே 'கரன்ட் ஷாக்' ... சில்மிஷம் செய்பவர்களுக்கு ஆப்பு...!!

சுருக்கம்

Hyderabad teen makes anti-rape electric shoe

சில்மிஷம் செய்பவர்கள், பலாத்காரம் செய்பவர்களிடம் இருந்து பெண்கள் தங்களைத் காத்துக்கொள்ள மாணவர் ஒருவர் ‘எலெக்ட்ரிக் ஷூ’ ஒன்றை தயாரித்துள்ளார்.

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சித்தார்த் மண்டலா(வயது17). இவர் தனது பள்ளிப்பருவத்தில் அறிவியலில் படித்த பாடங்களின் அடிப்படையில், பெண்கள் தங்களை சமூகவிரோதிகளிடம் இருந்து  காத்துக்கொள்ளும் வகையில் மின்சாரம்பாயும் பிரத்யேக ஷூ ஒன்றை தயாரித்துள்ளார்.

அது குறித்து சித்தார்த் மண்டலா கூறுகையில், “ நான் கண்டுபிடித்து இருக்கும் ‘எலெக்ட்ரோ ஷூ’ மூலம் பெண்கள் தங்களை பாலியல் பலாத்காரம், சில்மிஷம் செய்யும் நபர்களிடம் இருந்து காத்துக்கொள்ள முடியும். இந்த ஷூவில் இருந்து 0.1 ஆம்ப் மின்சாரம் எதிராளிகள் உடம்பில்  பெண்கள் பாய்ச்ச முடியும்.

 அதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு எச்சரிக்கை ஒலியும், குடும்ப உறுப்பினர்களின் செல்போன்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்பும்.

இந்த பிரத்யேக ஷூ வில் ஒரு சிறிய ‘சர்க்யூட் போர்டு’ இணைக்கப்பட்டுள்ளது. அந்த சர்க்கியூட் போர்டுக்கு தேவையான மின்சாரம், ஷூ அணிந்திருக்கும் பெண் நடக்கும் போது தரையில் ஏற்படும் உராய்வில் இருந்து உருவாகும். இதற்கு ‘பிஜியோ எலெக்ட்ரிக் எபெட்’ என்று இயற்பியலில் அழைப்பார்கள்.

அதிகமாக நடக்கும்போதும், அதிகமான உராய்வினால், மின்சாரம் உற்பத்தியாகி, அந்த ஷூக்குள் இருக்கும் பேட்டரியில் சேமிக்கப்படும்.

போதுமான அளவு பேட்டரி சார்ஜ் ஆனவுடன், அது குறித்த எச்சரிக்கை செய்யும். பெண்கள் தங்களை தாக்க, பலாத்காரம் செய்ய வரும் நபர்களை இந்த ஷூவால்எட்டி உதைக்கும் போது, ஷூவில் இருந்து மின்சாரம் எதிராளி உடம்பில் பாய்ந்து, அவர் பாதிக்கப்படுவார். அங்கிருந்து அந்த பெண் எளிதாக தப்பிக்க முடியும்.

இந்த கண்டுபிடிப்புக்கு நான் காப்புரிமை பெற முயன்று வருகிறேன். இதில் இன்னும் மாற்றங்கள் செய்து, சந்தையில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!