
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள கமல் ஸ்பாஞ்சி ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனத்துக்கு தெஸ்கோரா பிருத்தபுரியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இவ்விவகாரத்தில் நிலக்கரி துறை முன்னாள் செயலர் எச்.சி.குப்தா, கூடுதல் செயலாளராக இருந்த குரோபா மற்றும் சுரங்க ஒதுக்கீடு இயக்குநர் சமாரியா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இவ்வழக்கில் சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பரசார், குப்தா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என கடந்த 19 ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
ஆனால் அப்போது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே இன்று கூடிய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டது.