முதல்வரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை - இதுவரை ரூ. 40 கோடி..! 

First Published Oct 13, 2017, 8:25 PM IST
Highlights
Himachal Pradesh chief Veerabhata Singhs property has been reduced to Rs 5.6 crore.


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் ரூ.5.6 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை வீரபத்ர சிங்கின் ரூ.40 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை  முடக்கியுள்ளது. 

2009 முதல் 2011ம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக வீரபத்ர சிங் இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.1 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறி சி.பி.ஐ.வீரபத்தர சிங், அவரின் மனைவி பிரதிபா சிங், உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.14 கோடி சொத்துக்களையும் முடக்கியது.  

இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அமலாக்கப்பிரிவினர், தனியாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வீரபத்ரசிங், அவரின் மனைவி, மகன் ஆகியோர் மீது பதிவு செய்தனர். 

அதில்,  ரூ. 10 கோடி அளவுக்கு முறைகேடாக சொத்துக்கள் சேர்த்ததாக அமலாக்கப்பிரிவினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்நிலையில், இதுகுறித்த வழக்கில் தற்போது இமாச்சல முதலமைச்சராக உள்ள வீரபத்தர சிங்கின் ரூ. 5.6 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். இதுவரை வீரபத்ர சிங்கின் ரூ.40 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை  முடக்கியுள்ளது. 
 

click me!