Hijab Verdict : “இஸ்லாத்தில் ஹிஜாப் கட்டாயமல்ல..” நீதிபதிகள் தீர்ப்பில் கூறியது என்ன? முழு விவரம் இதோ.!

Published : Mar 15, 2022, 12:00 PM ISTUpdated : Mar 15, 2022, 12:04 PM IST
Hijab Verdict : “இஸ்லாத்தில் ஹிஜாப் கட்டாயமல்ல..” நீதிபதிகள் தீர்ப்பில் கூறியது என்ன? முழு விவரம் இதோ.!

சுருக்கம்

ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், 3 நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசின் தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும்  கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

ஹிஜாப் விவகாரம்

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். எனினும் அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க;- Aranthangi Nisha : ஹிஜாப் போடமாட்டிங்களா?.. நெட்டிசனின் கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த அறந்தாங்கி நிஷா!

பின்னர், கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவியரில் சிலர் காவி துண்டு அணிந்து வரத் தொடங்கியதால் பதற்றம் அதிகரித்தது. இதனையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

கர்நாடகா ஐகோர்ட் தீர்ப்பு

இந்நிலையில், ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், 3 நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

ஹிஜாப் தடை செல்லும்

* கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை சரியானது  தான்.

*  இஸ்லாமிய முறைப்படி  ஹிஜாப் அணிவது கட்டாயம் அல்ல.

*  கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டத் தடை தொடரும்.

*  அரசின் கல்வி நிறுவன சீருடை சட்டத்திற்கு  அனைவரும் உட்பட்டவர்கள்.

*  ஹிஜாப் தடைக்கு எதிரான சரியான முகாந்திரங்கள்  எதுவும் முன்வைக்கப்படவில்லை.

*  பள்ளிகளில் மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகள் அணிவதை அனுமதிக்க முடியாது.

*  ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை என்பது நியாயமான கட்டுப்பாடு தான்.

*  ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!