விமான படை ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது! 5 பேர் பலி

Asianet News Tamil  
Published : Oct 06, 2017, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
விமான படை ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது! 5 பேர் பலி

சுருக்கம்

Helicopter exploded 5 killed

அருணாச்சலபிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வெடித்து சிதறி  விபத்துக்குள்ளானது.

அதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்திய விமான படைக்குச் சொந்தமான Mi-17 V5 ஹெலிகாப்டர், இன்று அதிகாலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அருணாச்சல பிரதேசம், டாவாங் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டது.

அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

Mi-17 V5 ரக ஹெலிகாப்டர், இந்திய விமானப் படையின் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, இந்திய விமான படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?