இந்த 3 மாநிலங்களில் கனமழை கொட்ட போகுது.. ஆரஞ்சு அலர்ட் விடுத்த இந்திய வானிலை மையம்..

By Ramya sFirst Published May 27, 2023, 5:19 PM IST
Highlights

ஹரியானா, வடகிழக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை மையத்தின் விஞ்ஞானி டாக்டர் சோமா சென் ராய் இதுகுறித்து பேசிய போது “ அரபிக்கடலில் உள்ள ஈரப்பதம் காரணமாக வடமேற்கு இந்தியாவில் இன்றும் நாளையும் ஒரே மாதிரியான வானிலை இருக்கும். நாளை முதல் இதன் தாக்கம் முக்கியமாக உத்தரப்பிரதேசத்தில் இருக்கும். அடுத்த நாள் முதல் குறையும். வடமேற்கு இந்தியாவில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும். அடுத்த 3-4 நாட்களுக்கு டெல்லியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

ஹரியானா, வடகிழக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளோம், வடகிழக்கு உ.பி.யில் கனமழை மற்றும் பிற பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.

முன்னதாக, இன்று டெல்லி-என்சிஆரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் வானிலை மாற்றம் வட இந்தியாவில் நிலவும் வெப்பமான வானிலையில் இருந்து நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : நாட்டில் இந்த ஆண்டு மழைப்பொழிவு எப்படி இருக்கும்? இந்திய வானிலை மையம் விளக்கம்..

இதனிடையே வடமேற்கு இந்தியாவில் அடுத்த 4-5 நாட்களில் வடமேற்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் அவ்வப்போது பலத்த காற்று/மழையுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மே 27 ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்திலும், வடக்கு ராஜஸ்தானில் மே 28 மற்றும் 29 ஆம் தேதிகளிலும் மழை பெய்யக்கூடும்.

மே 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் இடியுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும். மே 27 ஆம் தேதி ஹரியானா மற்றும் வடகிழக்கு ராஜஸ்தான்.  மே 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் வடமேற்கு உத்தரப் பிரதேசத்திலும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு, அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுராவில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மே 27 அன்று அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா மற்றும் நாகாலாந்தில் கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 3 நாட்களுக்கு மத்தியப் பிரதேசத்தில் லேசானது முதல் மிதமானது வரை, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளாவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஒன்றிணைவோம் வாங்க.. பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்

click me!