ஒன்றிணைவோம் வாங்க.. பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்

Published : May 27, 2023, 05:05 PM IST
ஒன்றிணைவோம் வாங்க.. பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்

சுருக்கம்

பாஜகவின் அவசரச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரை இன்று ஹைதராபாத்தில் சந்தித்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வரும், பி.ஆர்.எஸ் தலைவருமான கே.சந்திரசேகர் ராவை இன்று (சனிக்கிழமை) ஹைதராபாத்தில் சந்தித்து, மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக ஆதரவு கோரினார்.  இந்த சந்திப்பில் அவருடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சாதா, சஞ்சய் சிங் மற்றும் பலர் இருந்தனர். ஹைதராபாத்தில் உள்ள பிரகதி பவனில் பிற்பகல் 1 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் இதுதொடர்பாக வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிராக பாஜக அரசு இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான மற்றும் ஜனநாயக விரோத அவசரச் சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரின் ஆதரவைக் கோருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற அரவிந்த் கெஜ்ரிவால் நாடு தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கெஜ்ரிவால் மற்ற ஆம் ஆத்மி தலைவர்களுடன் இணைந்து அவசரச் சட்டத்திற்கு எதிராக கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கே.சி.ஆரை வலியுறுத்தினார்.

இந்த அவசரச் சட்டத்திற்கு மாற்றாக மோடி அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரவுள்ள மசோதாவை எதிர்க்கும்படி பிஆர்எஸ்-ஐ அவர் கேட்டுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. மே 22 அன்று, அரவிந்த் கெஜ்ரிவால் தனது பீகார் பிரதிநிதியான நிதிஷ் குமாரை சந்தித்தார். அவர் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை அணிதிரட்டி வருகிறார்.

அதேபோல மே 25 அன்று, அரவிந்த் கெஜ்ரிவால் பகவந்த் மானுடன், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து தனது ஆதரவைப் பெற அழைப்பு விடுத்தார். சிவசேனா UBT தலைவர் உத்தவ் தாக்கரேவையும் ஆம் ஆத்மி தலைவர்கள் தனித்தனியாக சந்தித்து பேசினார். ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஆதரவைப் பெற நேரம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..ஜூன் 2ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. முழு விபரம்

இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!