பிசினஸ்  தொடங்கியவுடன்  5 லட்சம் கோடி  லாஸ்…. அதிர்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் !!

First Published Feb 6, 2018, 11:20 AM IST
Highlights
Heavy loss in mumbai share market


மும்பை பங்கு சந்தை இன்று தொடங்கியவுடன் வரலாறு காணாடித அளவுக்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி  ரூபாய்  அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  926.27 புள்ளிகள் குறைந்து 33,830.89 புள்ளிகளாக இருந்தன. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 281.75 புள்ளிகள் குறைந்து 10,384.80 புள்ளிகளாக இருந்தன. 

மும்பை தேசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பிசினஸ் தொடங்கிய சில விநாடிகளில் ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதால் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று முதல் பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக  வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்குசந்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் தொடங்கிய உடனே 1000 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் தொடங்கியவுடன் 300 புள்ளிகள் சரிந்தது

அதே நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் குறைந்து  64.36  ரூபாயாக உள்ளது.

click me!