
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால், ரயில் மற்றும் விமான சேவைகளின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக கடந்த மாதம் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில், குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது. பனிமூட்டம் இன்று காலையும் நீடித்ததால் விமான மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பனிமூட்டத்தின் காரணமாக டெல்லியிலிருந்து புறப்படும் 101 ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. 18 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 11 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் விமானங்களின் பயண நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பனிமூட்டத்தால் சாலை போக்கு வரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பனிமூட்டத்துடன் கடுமையான குளிரும் நிலவி வருவதால் நடைபாதைகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.