வெப்ப அலை எச்சரிக்கை: வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

By Manikanda PrabuFirst Published Mar 26, 2024, 2:55 PM IST
Highlights

வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்களின் பாதுகாப்புக்காக இந்திய தேர்தல் ஆணையம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.

இந்த நிலையில், நடப்பாண்டில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்றும், அதிக வெப்பம் அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு வாக்காளர்களின் பாதுகாப்புக்காக இந்திய தேர்தல் ஆணையம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை விவரம் பின்வருமாறு;

** வெயிலில் செல்வதை குறிப்பாக, மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கவும்.

** தாகமாக இல்லாவிட்டாலும் கூடுமானவரை போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

** இலகுவான, வெளிர் நிற, பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெயிலில் வெளியே செல்லும் போது பாதுகாப்பு கண்ணாடிகள், குடை/தொப்பி, காலணிகள் போன்றவற்றை பயன்படுத்தவும்.

** வெளிப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது கடினமான செயல்களைத் தவிர்க்கவும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸுக்கு இலங்கை செல்ல பாஸ்போர்ட்: தமிழக அரசு தகவல்!

** பயணத்தின் போது, உங்களுடன் தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள்.

** ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும், இது உடலை நீரிழப்பு செய்யும்.

** புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம்.

** நீங்கள் வெளியில் வேலை செய்தால் தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்துங்கள். உங்கள் தலை, கழுத்து, முகம் மற்றும் கைகால்களை சுற்றி ஈரமான துணியைப் பயன்படுத்துங்கள்.

** நிறுத்தப்படும் வாகனங்களில் குழந்தைகளையோ செல்லப்பிராணிகளையோ விட்டு விட்டு செல்லாதீர்கள்.

** உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

** ORS, வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களான லஸ்ஸி, அரிசி நீர், எலுமிச்சை நீர், மோர் போன்றவற்றை குடியுங்கள். இது உடலை நீர்ச்சத்துடன் இருக்க செய்ய உதவுகிறது.

** விலங்குகளை நிழலில் பராமரித்து நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும்.

** உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருங்கள், திரைச்சீலைகள், ஷட்டர்கள் அல்லது சன்ஷேட்களைப் பயன்படுத்தவும். இரவில் ஜன்னல்களைத் திறந்து வையுங்கள்.

** மின்விசிறிகள், ஈரமான ஆடைகளை பயன்படுத்துங்கள். குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கவும்.

click me!