மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மத்திய ஊழியர்களின் உயர்த்தப்பட்ட சம்பளம் மார்ச் 30ஆம் தேதி கிடைக்கும் என்று சொலப்படுகிறது.
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், ஹோலி பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் 30ஆம் தேதியே சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மத்திய ஊழியர்களின் உயர்த்தப்பட்ட சம்பளம் மார்ச் 30ஆம் தேதி கிடைக்கும் என்று சொலப்படுகிறது. ஆனால், நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
QR கோடு மூலம் கலெக்ஷன் செய்யும் டிஜிட்டல் இந்தியாவின் பிச்சைக்காரர்! தேங்க் யூ மோடி ஜி!
இது கடந்த ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் இந்த மாதச் சம்பளத்துடன் சேர்த்துக் கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50% ஆக உயர்ந்துள்ளதால், HRA எனப்படும் வீட்டு வாடகை படியும் அதிகரித்துள்ளது. நகரத்தைப் பொறுத்து, மத்திய ஊழியர்களுக்கு 30 சதவீதம் வரை வீட்டு வாடகைப் படி கிடைக்கும்.
மத்திய ஊழியர்களின் குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு உதவித்தொகை, குழந்தை கல்வி உதவித்தொகை, விடுதி மானியம், இடமாறுதல் மீதான பயணப்படி, பணிக்கொடை உச்சவரம்பு உள்ளிட்ட சலுகைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த கூடுதல் பலன்கள் அனைத்தும் விண்ணணப்பித்துப் பெறவேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.
Sonam Wangchuk: சோனம் வாங்சுக்கின் 21 நாள் உண்ணாவிரதப் போராட்டம் ஏன்? அரசு செவிசாய்க்குமா?