Rahul:அவரை கொன்றுவிட்டேன், நீங்கள் பார்ப்பது அந்த ராகுல் அல்ல: புதிர் போட்ட ராகுல் காந்தி

By Pothy Raj  |  First Published Jan 10, 2023, 10:51 AM IST

நான் ராகுல் காந்தியை கொன்றுவிட்டேன், நீங்கள் பார்ப்பது  அந்த ராகுல் அல்ல என்று காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி புதிர்போடும் வகையில் பேசினார்.


நான் ராகுல் காந்தியை கொன்றுவிட்டேன், நீங்கள் பார்ப்பது  அந்த ராகுல் அல்ல என்று காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி புதிர்போடும் வகையில் பேசினார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கினார். இதுவரை 115 நாட்களுக்கும் மேலாக நடந்து, 3ஆயிரம் கி.மீ தொலைவுக்கும் அதிகமாக ராகுல் காந்தி கடந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

தொடர்ந்து மண்ணில் புதையும் கிராமங்கள்.. செயற்கைகோள் மூலம் கண்காணிப்பு - என்ன தான் நடக்கிறது ?

இதுவரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் நடந்து, பஞ்சாப்மாநிலத்துக்குள் ராகுல் காந்தி நுழைய உள்ளார்.
இதற்கிடையே ராகுல் காந்தி நேற்று ஹரியானாவில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ராகுல் காந்தி என்ற நபர் மக்கள் மனதில்தான் இருக்கிறார், ஆனால், நான் எப்போதோ அவரை கொன்றுவிட்டேன். ராகுல் காந்தி என்ற நபர் உங்கள் மனதில் இருந்தால், நான் அவரை கொன்றுவிட்டேன். அந்த ராகுல் காந்தி இப்போது இல்லை. என்னுடைய மனதிலும் அந்த ராகுல் காந்தி இல்லை, அவர் போய்விட்டார்.

கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு 15 நாட்களில் அனுமதி: ஆதார் பூனாவல்லா நம்பிக்கை

நீங்கள் பார்ப்பது ராகுல் காந்தி அல்ல. நிஜ உருவத்தில் என்னைப் பார்க்கலாம். உங்களுக்கு நான் சொல்வது புரியவில்லையா. இந்து மதத்தைப் படியுங்கள், கடவுள் சிவனைப் படியுங்கள். உங்களுக்குப் புரியும். வியபப்டையாதீர்கல். உங்கள் மனதில் இருக்கும் ராகுல் காந்தி நான் அல்ல, அவர் பாஜக மனதில் இருப்பார், என் மனதில் அந்த ராகுல் காந்தி இல்லை.

ஏன் வியப்பாகப் பார்க்கிறீர்கள், எனக்கென்று எந்தவிதமான இமேஜும் இல்லை. என்னுடைய தோற்றத்தை பராமரிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. என் தோற்றத்தைப் பார்த்து நல்லவிதமாகப் பேசினாலும், அல்லது தவறாகப் பேசினாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு என்னுடைய பணியைச் செய்ய வேண்டும்”

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்

click me!