74வது குடியரசு தின அணிவகுப்பு காண வேண்டுமா? டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி? விவரம் உள்ளே!!

By Narendran SFirst Published Jan 9, 2023, 7:39 PM IST
Highlights

74வது குடியரசு தின அணிவகுப்பை காண்பதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் வாயிலாகவும் நேரிலும் சென்று வாங்குவதற்கான வழிமுறைகளை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.  

74வது குடியரசு தின அணிவகுப்பை காண்பதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் வாயிலாகவும் நேரிலும் சென்று வாங்குவதற்கான வழிமுறைகளை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. இந்தியா தனது 74 ஆவது குடியரசு தினத்தை வரும் ஜன.26 ஆம் தேதி கொண்டாட உள்ளது. இதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே ஆயுதப்படைகள், டெல்லி போலீசார் மற்றும் பலர் செய்து வருகின்றனர். மேலும் டெல்லியில் கர்தவ்யா பாதையில் அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு 15 நாட்களில் அனுமதி: ஆதார் பூனாவல்லா நம்பிக்கை

ஜன.26 ஆம் தேதி நடைபெறும் மாபெரும் அணிவகுப்பு மற்றும் பிற செயல்பாடுகளைக் காண, மக்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்ய www.aamantran.mod.gov.in. என்ற ஆன்லைன் போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இ-அழைப்புகள் அல்லது இ-டிக்கெட்டுகள் தவிர, டிக்கெட் விற்பனைக்காக டெல்லியில் பல இடங்களில் பூத் கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்தும் டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். 

குடியரசு தின அணிவகுப்பு டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்குவது எப்படி?

  • www.aamantran.mod.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவும்.
  • கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, நிகழ்வில் கலந்துகொள்ளும் நபர்களின் தேவையான தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
  • அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு OTP ஐ உள்ளிடவும்.
  • உங்களுக்கு விருப்பமான டிக்கெட்டை தேர்வு செய்யவும்.
  • பின்னர் ஆன்லைனில் அதற்கான பணம் செலுத்தவும். 

இதையும் படிங்க: இந்தியாவில் அறிமுகப்படுத்திய மஹிந்திரா நிறுவனம் புதிய கார்… விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லியில் டிக்கெட் கவுண்டர்கள் உள்ள இடங்கள்: 

  • சேனா பவன் (கேட் எண் 2)
  • சாஸ்திரி பவன் (கேட் எண் 3)
  • ஜந்தர் மந்தர் (பிரதான கேட் அருகில்)
  • பிரகதி மைதானம் (கேட் எண் 1)
  • பாராளுமன்ற மாளிகை (வரவேற்பு அலுவலகம்)

நேரம்: 

  • காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை 
  • மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை. 
click me!