Covovax Vaccine: கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு 15 நாட்களில் அனுமதி: ஆதார் பூனாவல்லா நம்பிக்கை

By Pothy RajFirst Published Jan 9, 2023, 5:19 PM IST
Highlights

சீரம் மருந்து நிறுவனத்தின் கொரோனா வைரஸுக்கு எதிரான கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் அரசு அனுமதி கிடைத்துவிடும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீரம் மருந்து நிறுவனத்தின் கொரோனா வைரஸுக்கு எதிரான கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் அரசு அனுமதி கிடைத்துவிடும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது

ஓஆர்ஓபி திட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிலுவைத் தொகை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

புனேயில் உல்ள பாரதி வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சீரம் மருந்து நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனாவல்லா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனா மற்றும் அதன் உருமாற்றமான ஒமைக்ரான் உள்ளிட்ட வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 

மத்திய அரசுக்கு தேவையான அளவு கோவிஷீல்ட் தடுப்பூசியை வழங்கியிருக்கிறோம், இருப்பும் வைத்திருக்கிறோம். ஆதலால், பற்றாக்குறை வராது. அடுத்ததாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் கேட்டுள்ளோம். கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி அடுத்த 10 முதல் 15 நாட்களில் அரசின் அனுமதிகிடைத்துவிடும். இது சிறந்த பூஸ்டர் தடுப்பூசியாகும், ஒமைக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படும், கோவிஷீல்டுக்கும் மேலாக செயல்படும். 

திருப்பதி கோயில் ஜனவரி, பிப்ரவரிக்கான சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு

சுகாதாரத்துக்காக மட்டும் ஒவ்வொருவரும் இந்தியாவை உற்றுநோக்கவில்லை, இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான மக்களை கொரோனா காலத்தில் கவனித்துக்கொண்டதோடு 70 முதல் 80 நாடுகளுக்கு தடுப்பூசிகளையும் வழங்கி உதவி செய்தது.

மத்தியில் நல்ல தலைமை இருப்பதால்தான் இந்த காரியங்கள் அனைத்தும் சாத்தியமானது, நம்முடைய மாநில அரசுகள், சுகாதாரப் பணியாளர்கள், உற்பத்தியாளர்கள், அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு இலக்குக்காக சேர்ந்து உழைத்தோம்”என தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் பூனாவல்லாவுக்கு டாக்டர் பதங்ராவ் கதாம் நினைவு விருதை என்சிபி கட்சித் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வழங்கினர். 
 

click me!