சிறுத்தையை அடித்தே கொன்ற ஊர் மக்கள்...!!!

Asianet News Tamil  
Published : Nov 25, 2016, 03:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
சிறுத்தையை அடித்தே கொன்ற ஊர் மக்கள்...!!!

சுருக்கம்

ஹரியான மாநிலம் கூர்கான் அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்று அருகில் உள்ள கிராமத்திற்கு வழி மாறி வந்துள்ளது.

அந்த கிராமத்தில் சுற்றி திரிந்த சிறுத்தை தெருவில் திரிந்து கொண்டிருந்த ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை தாக்கியதாகவும், பொதுமக்களை விரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் ஒரு வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த கட்டிலுக்குள் ஒளிந்து கொண்டதை கண்ட அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறுத்தையை அடித்து கொன்றுள்ளனர். இதில் 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த சிறுத்தையை பிடிக்கவில்லைஎன்றும், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், சிறுத்தையை கொன்ற குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளூர் வன உயிரின தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

150+ சீட்.? மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை.. மம்தாவுக்கு குட்பை.. எக்சிட் போல் முடிவுகள் சொல்வது என்ன?
Assam Election: அசாமில் அடிச்சு தூக்கும் பாஜக.. 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும்.. பரபர கருத்து கணிப்பு