அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு... அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

Published : Oct 15, 2019, 11:58 AM IST
அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு... அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

சுருக்கம்

திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அமித் ஷாவால் இந்த பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க இயலவில்லை என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அமித் ஷா பங்கேற்காத நிலையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேரணியில் உரையாற்றினர். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக திட்டமிட்டிருந்த அரியானா பிரச்சார கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

அரியானா மாநிலத்தில் வரும் 21-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரியானா மாநிலத்தில் உள்ள படேகாபாத் மாவட்டத்தின் தோஹானா, சிர்சா மாவட்டத்தின் எல்லெனாபாத் மற்றும் ஹிசார் மாவட்டத்தின் நர்நாடு பகுதிகளில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மூன்று தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அமித் ஷாவால் இந்த பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க இயலவில்லை என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமித் ஷா பங்கேற்காத நிலையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேரணியில் உரையாற்றினர். அமித்ஷாவிற்கு திடீர் உடல் நிலை சரியில்லாமல் பிரச்சாரத்தில் பங்கேற்காதது பாஜக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

PREV
click me!

Recommended Stories

Rahul Gandhi with Messi: மெஸ்ஸியுடன் கூலாக உரையாடிய ராகுல் காந்தி.. ரசிகர்கள் ஆரவாரம்..
Lionel Messi: ஹைதராபாத்தில் மெஸ்ஸி மேஜிக்.. முதல்வர் ரேவந்த் உடன் 2 கோல்கள்!