ப.சிதம்பரத்தை மீண்டும் சிறையில் தள்ள பக்காவாக ஸ்கெட்ச்... அதிரடி காட்டும் பாஜக...!

Published : Oct 14, 2019, 06:13 PM IST
ப.சிதம்பரத்தை மீண்டும் சிறையில் தள்ள பக்காவாக ஸ்கெட்ச்... அதிரடி காட்டும் பாஜக...!

சுருக்கம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அண்மையில் சிபிஐ கைது செய்தது. இதையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிபிஐ காவல் முடிந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் குகர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத்துறை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல் வாதிடுகையில், சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது, காவலில் எடுத்து விசாரிக்கவும் கோர முடியாது. மேலும், விசாரணைக்காக மட்டுமே ஒருவரை ஆஜர்படுத்த வேண்டும், கைதுக்காக ஒரு நபரை ஆஜர்படுத்த சட்டத்தில் இடம் இல்லை. ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தால், சிபிஐ காவலின்போது அளித்த வசதிகள் வழங்க வேண்டும் என கூறினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!