இமாச்சல பிரதேச தேர்தல் கருத்துக்கணிப்பில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் காங்கிரஸ் கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் உள்ள வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் என்று தெரிய வந்து இருந்தது.
2017 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் பிற கட்சிகள் முறையே 41.7 சதவீதம், 48.8 சதவீதம் மற்றும் 9.5 சதவீதம் வாக்குகள் பெற்று இருந்தன. மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் 44.2 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாக சமீபத்திய சர்வேயில் தெரிய வந்து இருந்தது. காங்கிரஸின் வாக்கு சதவீதம் 2.5 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.
பாஜக 44.8 சதவீத வாக்குகளை பெற்று, 3.9 சதவீத வாக்குகள் குறையலாம் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆம் ஆத்மி கட்சி 3.3 சதவீதம் பெறலாம், மற்றவர்கள் 7.7 சதவீதம் பெறலாம் என்றும் மற்றவர்களின் வாக்குகள் சுமார் 1.8 சதவீதம் குறையலாம் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது. இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள இடங்கள் 68. ஆட்சியை கைப்பற்ற 35 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
இதையும் படிங்க.. Himachal Pradesh Election Result: இமாச்சலில் காங்கிரஸ், பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் சுயேட்சை வேட்பாளர்கள் !!
யாருக்கும் வெற்றி கிடைக்காது என்பதைப் போலத்தான் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்து இருந்தது. ஏனெனில் பாஜக முன்னிலை வகிக்கலாம் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ததால் கடைசி நிமிட சர்வேயில் காங்கிரஸ் எழுச்சி பெறுவதாகவும் கணிப்பில் தெரிய வந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி 38 இடங்களிலும், பாஜக 27 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளதால் காங்கிரஸ் ஆட்சி இமாச்சலில் அமையும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க.. Gujarat Election Result 2022: குஜராத் தேர்தல் முடிவு : பாஜக புதிய வரலாறு ! ஜடேஜா மனைவி, மேவானி, படேல் முன்னில