Gujarat Election Result 2022: குஜராத் தேர்தல் முடிவு: கம்யூனிஸ்ட்டுக்கு அடுத்து பாஜக! கொண்டாட்டம் ஆரம்பம்

By Pothy RajFirst Published Dec 8, 2022, 10:44 AM IST
Highlights

குஜராத் சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பாஜக இமாலய வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. 7-வது முறையாக குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் பாஜக உள்ளது.

குஜராத் சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பாஜக இமாலய வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. 7-வது முறையாக குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் பாஜக உள்ளது.

குஜராத்தில் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 1ம் தேதி  89 தொகுதிகளுக்கும் மற்றும் 5ம் தேதி93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இன்று காலை முதல் 33 மாவட்டங்களில் 37 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன் சீல் உடைக்கப்பட்டு 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பாஜக அசுரப் பெரும்பான்மையுடன் நகர்ந்து வந்தது. கடந்த 1995ம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருக்கும் பாஜககட்சி, தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிகிறது.

குஜராத்தில் ஓட்டு எண்ணிக்கை:பாஜக அசுர முன்னிலை:ஹர்திக் படேல்,அல்பேஷ் பின்னடைவு

தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின்படி, பாஜக 149 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது, காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 6 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

தனியார் சேனல்கள் செய்திகளின்படி, பாஜக 150 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இந்தியாவில் ஒரு மாநிலத்தில் அதிகமுறை ஒரே கட்சி ஆண்டது என்ற பெருமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே பெற்றிருந்தது. மேற்கு வங்கத்தில் கடந்த 1977 முதல் 2011ம ஆண்டு வரை தொடர்ந்து 7 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வென்றிருந்தது, 34 ஆண்டுகள் ஆட்சி செய்தது. 

பாஜக குஜராத்தில் ஆட்சி அமைக்கும்பட்சத்தில் நாட்டிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்தார்போல், ஒரு மாநிலத்தில் 7வது முறையாக தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்கும் பெருமையை பாஜக பெறும்.

குஜராத் தேர்தல் முடிவு : பாஜக புதிய வரலாறு ! ஜடேஜா மனைவி, மேவானி, படேல் முன்னிலை

குஜராத் மாநிலத்தில் கடந்த 1995 முதல் பாஜக ஆட்சியை தக்கவைத்து வருகிறது. ஏறக்குறைய 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கிறது, இந்தத் தேர்தலில் வென்று ஆட்சியில் அமரும்  பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளோடு சேர்த்தால் 32 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்து புதிய வரலாற்றை பாஜக  படைக்கும்.

அது மட்டுமல்லாமல் குஜராத் தேர்தலில் பாஜக கடைசியாக 2002 தேர்தலில் 127 இடங்களில் வென்றதே சிறப்பான வெற்றியாக, அதிக தொகுதிகளை கைப்பற்றியதாக இருந்தது. ஆனால், அதை இந்த முறைத் தேர்தலில் தனது சாதனையை தானே பாஜக வென்றுவிடும் எனத் தெரிகிறது. 182 தொகுதிகளில் தற்போதுவரை 150 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெறுவதால் இமாலயவெற்றி பெற்று அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் எனத் தெரிகிறது.

குஜராத்தில் கவனத்தை ஈர்க்கும் வட்கம், விராம்கம், காந்திநகர் தெற்கு தொகுதிகள்?

குஜராத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதால், குஜராத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாஜக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி, பட்டாசுகள் வெடித்தும், ஆடிப்பாடியும் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். 

click me!