Gujarat Election Result 2022: குஜராத் தேர்தல் முடிவு : பாஜக புதிய வரலாறு ! ஜடேஜா மனைவி, மேவானி, படேல் முன்னிலை

By Pothy Raj  |  First Published Dec 8, 2022, 10:00 AM IST

குஜராத் சட்டசபைத் தேர்தலில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா, காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.


குஜராத் சட்டசபைத் தேர்தலில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா, காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.

குஜராத்தில் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. முதல் கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 2ம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. 

Tap to resize

Latest Videos

குஜராத்தில் பாஜக 134 தொகுதிகளிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் முன்னிலை!!

இன்று காலை முதல் 33 மாவட்டங்களில் 37 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன் சீல் உடைக்கப்பட்டு 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பாஜக அசுரப் பெரும்பான்மையுடன் நகர்ந்து வந்தது. கடந்த 1995ம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருக்கும் பாஜககட்சி, தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிகிறது.

காலை 9.30 மணிநிலவரப்படி பாஜக 133 இடங்களில் அதாவது ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும், ஆம்ஆத்மி 8 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பாஜக 98 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது, காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், ஆம் ஆத்மி 10 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் வனத்தை ஈர்க்கும் வட்கம், விராம்கம், காந்திநகர் தெற்கு தொகுதிகள்?

கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா சமீபத்தில்தான் பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திரசிங் ஜடேஜாவை பின்னுக்குத் தள்ளி ரிவாபா ஜடேஜா முன்னிலை பெற்றுள்ளார்.

வட்கம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி முன்னிலை பெற்றுள்ளார். பாஜகவின் வகேலா, ஆம்ஆத்மி கட்சியின் தல்பத் பாடியாவைவிட முன்னிலையுடன் மேவானி நகர்ந்து வருகிறார்

விராம்கம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹர்திக் படேல் தொடக்கத்தி் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் பின்தங்கினார். ஆனால், தற்போது முன்னிலையுடன் ஹர்திக் படேல் நகர்ந்து வருகிறார். 

கட்டார்கம் தொகுதியில் ஆம்ஆத்மி மாநிலத் தலைவர் கோபால் இடாலியா போட்டியிட்டார். கோபால் இடாலியா, பாஜகவின் வினோத் மரோடியா, காங்கிரஸ் வேட்பாளர் கல்பேஷ் வரியாவை விட முன்னிலையுடன் கோபால் நகர்ந்து வருகிறார்

click me!