அக்- 13ல் நடைபெறும் யுஜிசி, நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. இன்று முதல் பதவிறக்கம் செய்யலாம்.

By Ezhilarasan Babu  |  First Published Oct 11, 2022, 1:11 PM IST

அக்டோபர் 13 அன்று நடைபெற உள்ள யுஜிசி, நெட்  தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி நெட்  தேர்வுக்கான ஹால் டிக்கெட் 2022 தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. 
அதை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அக்டோபர் 13 அன்று நடைபெற உள்ள யுஜிசி, நெட்  தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி நெட்  தேர்வுக்கான ஹால் டிக்கெட் 2022 தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. 
அதை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெற மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை( junior research fellowship -JRF)  பெறுவதற்கு நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனபது கட்டாயம். எனவே  இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. இந்நிலையில் 2020 மற்றம் 2021 ஆண்டுக்கான தேர்வுகள் கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. எனவே அத்தேர்வுகள் தற்போது சுழற்சி முறையில் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்:   நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் MBBS,BDS படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு: விண்ணப்பிப்பு தொடங்கியது

இந்நிலையில் அக்டோபர் 13-ம் தேதி இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டைதேசிய தேர்வு முகமை NTA வெளியிட்டுள்ளது. இன்று முதல் ஹால் டிக்கட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும், ஹால் டிக்கெட்டை எப்படி பதிவிறக்கும் செய்வது என்ற தகவல் பின்வருமாறு:- UGC NET இணையத்தில் ஆல் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ugcnet.nta.nic.in என்ற லிங்கில் உள் நுழைய வேண்டும் பின்னர் அதில் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி குறிப்பிட வேண்டும் ( இது ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவி பேராசிரியர்கள் தகுதிக்கான கணினி அடிப்படையிலான முறையில் இருக்கும்)

இதையும் படியுங்கள்:  சிவசங்கர் எனக்கு தாலி கட்டினார்.. முன்னாள் அமைச்சர் என்னை உல்லாசத்துக்கு அழைத்தார்.. சொப்னா சொன்ன பகீர் தகவல்

அதன்படி UGC NET அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்குள் ugcnet.nta.nic.in  உள்நுழைய வேண்டும். முகப்பு பக்கத்தின் இறுதிக்கு ஸ்குரோல் செய்து  ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். ரெஜிஸ்ட்ரேஷன் பக்கத்தில் பெயர், பிறந்த தேதி, பாதுகாப்பு குறியீடு உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். மேலும் தேவையான சான்றுகளை பதிவிட வேண்டும், பின்னர் அனைத்தையும் சரி பார்த்து ஓகே கிளிக் கொடுத்தால் ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். பிறகு அதை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அதை எதிர்கால தேவைக்காக ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக் கொள்வது நல்லது. தேர்வு எழுதுபவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை மறக்காமல் தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்,  ஏனெனில் ஆல் டிக்கெட்டை சோதித்த பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப் படுவீர்கள். முன்னதாக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில், அதை சரி பார்ப்பதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது பிரச்சனைகள் இருந்தாலோ 011-40759000  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது ugcnet@nta.ac.in என்றால்  முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!