உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை தலைமை நீதிபதி யுயு லலித் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை தலைமை நீதிபதி யுயு லலித் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
இது தொடர்பான பரிந்துரைக் கடிதத்தை கடந்த 7ம் தேதி மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு தலைமை நீதிபதி லலித் அனுப்பியுள்ளார்.
மத்திய அரசு இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டால், வரும் நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பதவி ஏற்பார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட யுயு லலித்தின் பதவிக்காலம் 74 நாட்கள்தான். அவரின் பதவிக்காலம் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்பதால், அவரின் பரிந்துரையை மத்திய அரசு கேட்டிருந்தது.
சுவிஸ் வங்கியில் பணம் டெபாசிட்; இந்திய அரசுடன் பகிர்ந்து கொண்ட ரகசிய தகவல்கள்!!
உச்ச நீதிமன்றத்தின் செயல்முறை குறிப்பானையின்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் மூத்தநீதிபதியாகஇருப்பவர்தான் தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும். இந்த செயல்முறை குறிப்பாணை, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பரிந்துரை ஆகியவற்றைக் குறிக்கிறது
அந்த வகையில் பார்த்தால் உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர் டிஒய் சந்திரசூட். செயல்முறை குறிப்பாணையின்படி பரிந்துரைக்கப்பட வேண்டுமென்றால், அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயரை யுயு லலித் பரிந்துரைப்பார்.
ஒருவேளை ஒய்வி சந்திரசூட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால் அவரின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதிவரை நீடிக்கும்.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட்டின் மகன்தான் டிஒய் சந்திரசூட். ஒய்வி.சந்திரசூட் கடந்த 1978 பிப்ரவரி22 முதல் 1985 ஜூலை11ம் தேதிவரை பணியில் இருந்தார். தலைமைநீதிபதியாக நீண்டகாலம் பதவிவகித்தவரும் இவர்தான்.
டிஒய் சந்திரசூட் கடந்த 2016ம் ஆண்டு, மே 13ம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தலைமை நீதிபதியாக வர இருக்கும் டிஒய் சந்திரசூட் இதற்கு முன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக, 2013ம் ஆண்டு, அக்டோபர் 31ம் தேதியிலிருந்து பணியாற்றி அங்கிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு பதவி உயர்த்தப்பட்டார்
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் முன் மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பணியாற்றினார். மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக சந்திரசூட் 1998ம் ஆண்டு ஜூனில் உயர்த்தப்பட்டார். அதன்பின், அந்த ஆண்டே மாநில அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயில் புனரமைப்பு நிறைவு: நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
நீதிபதி டிஒய் சந்திரசூட் டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் இளநிலை பொருளாதாரம் படிப்பு முடித்தார். அதன்பின், டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்எல்பி முடித்து, அமெரிக்காவின் ஹார்வார்ட் சட்டக்கல்லூரியில் முனைவர் பட்டமும், எல்எல்எம் பட்டமும் முடித்தார். உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி எடுத்த சந்திரசூட், மும்பை பல்கலைகழகத்தில் கவுரவ விரிவுரையாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது