குறைந்த செலவில் கப்பல் மூலம் ஹஜ் பயணம் .....இந்தியாவின் திட்டத்திற்கு சவுதி அரேபியா ஒப்புதல்

Asianet News Tamil  
Published : Jan 09, 2018, 09:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
குறைந்த செலவில் கப்பல் மூலம் ஹஜ் பயணம் .....இந்தியாவின் திட்டத்திற்கு சவுதி அரேபியா ஒப்புதல்

சுருக்கம்

Hajj Travel With Low Cost Shipping Saudi Arabia Approves India Plan

குறைந்த செலவில், கப்பல் மூலம் ஹஜ் பயணிகளை அனுப்பும் இந்தியாவின் திட்டத்திற்கு சவுதி அரேபியா ஒப்புதல் தெரிவித்து உள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா - சவுதி அரேபியா இடையே ஹஜ் பயணத்திற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது.

பின்னர் இதுகுறித்து மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளதாவது:-

கடல் வழி ஹஜ் பயணம்

‘‘இந்தியாவில் இருந்து கடல் வழியாக கப்பலில் ஹஜ் பயணிகளை அனுப்பும் திட்டத்திற்கு சவுதி அரேபியா கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

எனினும் இதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள், ஏற்பாடுகள் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேசி முடிவு செய்வார்கள்.

ஏழைகளுக்குப் பயன்

வரும் ஆண்டுகளில் கடல் வழி ஹஜ் பயணம் சாத்தியமாகும். கப்பல் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்வதால், பயண செலவு வெகுவாக குறையும்.

இதன் மூலம் ஏழை, எளிய இஸ்லாமிய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும்.

ஆண்கள் துணையின்றி...

ஆண்கள் துணையின்றி பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முதன் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், நான்கு அல்லது ஐந்து பேர் ஒரு குழுவாக ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெண் ஊழியர்கள்

இந்த ஆண்டு, 1,300 பெண்கள் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் வழக்கமான குலுக்கல் முறை அல்லாமல் நேரடியாக தேர்வு செய்யப்படுவர்.

அவர்களுக்கு தனியாக தங்குமிடம், போக்குவரத்து போன்றவை ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்காக பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர்'' எனக் கூறினார்.

மும்பையில் இருந்து...

மும்பையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு கப்பல் மூலம் ஹஜ் பயணம் செய்ய வசதியாக முன்பு கப்பல் இயக்கப்பட்டு வந்தது.

எனினும் 1995-ம் ஆண்டிற்கு பின் இது நிறுத்திக் கொள்ளப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!