காந்தியை சுட்டுக் கொலை செய்தது கோட்ஷே தான்... உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

Asianet News Tamil  
Published : Jan 08, 2018, 05:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
 காந்தியை சுட்டுக் கொலை செய்தது கோட்ஷே தான்... உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

சுருக்கம்

Mahatma Gandhis murder should be investigated again

மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமா? என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிமன்ற ஆய்வு வழக்கறிஞர் அமரேந்தர் சரண் தனது அறிக்கையை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

காந்தி கொலை வழக்கு

கடந்த 1948ம் ஆண்டு ஜனவரி 30ந்தேதி நாதுராம் கோட்சே என்பவரால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தேஆகிய இருவரும் கடந்த 1949ம் ஆண்டு நவம்பர் 11ந் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

புதிய மனு தாக்கல்

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ‘அபினவ் பாரத்’ என்ற அமைப்பின் அறங்காவலர் டாக்டர் பங்கஜ்பத்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் ‘‘நூதூராம் கோட்சைசுட்டபோது, 3 குண்டுகள் பாய்ந்ததாகவே அறிக்கை இருக்கிறது. ஆனால், காந்தி உடம்பின் மீது 4 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. 4-வது குண்டு எங்கிருந்து வந்தது என்று முறையாக விசாரிக்கவில்லை. அந்த 4-வது குண்டுதான் காந்தி உயிரிழக்க காரணம்.

விசாரிக்கவில்லை

மேலும் 1966-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி கே.எல்.கபூர் ஆணையம் உண்மையை வெளிக்கொண்டுவரவில்லை. கோட்சே பயன்படுத்திய இத்தாலி பெரட்டா ரக சிறிய துப்பாக்கியை அவருக்கு கங்காதர்தண்டவதே என்பவர் கொடுத்துள்ளார். அவருக்கு ஜெகதீஷ் பிரகாஷ் கோயல் என்பவர் துப்பாக்கியைகொடுத்துள்ளார். இதற்கு மேல் துப்பாக்கி எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கவில்லை. கொலை சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் பதிவு எண் 606824. இது குவாலியரைச் சேர்ந்த டாக்டர்தத்தாத்ரேயா பர்சுரேவுக்கு சொந்தமானது என்று சந்தேகம் எழுப்பப்பட்டது.

எங்கிருந்து வந்தது?

அவரைக் கண்டுபிடித்தபோது அவரிடம் அதே பெரட்டா ரக துப்பாக்கி இருந்தது. அதன் பதிவு எண் 719791. ஆனால், அதே பதிவு எண்ணில் குவாலியரைச் சேர்ந்த உதய் சந்த் என்பவரிடமும் ஒரு துப்பாக்கி இருந்துள்ளது. காந்தியின் உயிரைப் பறிக்க காரணமாக இருந்த அந்த நான்காவது குண்டு, பதிவு எண் 606824 மற்றும் 719791 ஆகிய இரண்டு துப்பாக்கிகளில் இருந்தும் வந்தது அல்ல என்று 48-ம் ஆண்டு வெளிவந்தபோலீஸ் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுவிசாரணை

எனவே, இந்த 4-வது குண்டு எங்கிருந்து வந்தது என்ற மர்மத்தை கண்டறிய மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

உதவியாளர் நியமனம்

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் எஸ்.ஏ பாப்டே, எல். நாகேஷ்வர ராவ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு விசாரணைக்கு உகந்ததாக என்பதை ஆய்வு செய்ய  மூத்த வழக்கறிஞர் அமரேந்தர் சரண் (AmicusCuriae) நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமனம் செய்தனர்.

அறிக்கை தாக்கல்

மூத்த வழக்கறிஞர் அமரேந்தர் சரண் அனைத்து ஆய்வுகளையும் முடித்து தனது அறிக்கையை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் கூறுகையில், “ மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற வழக்கில், நாதூராம் கோட்சேவைத் தவிர, 2-வது நபர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதில் சந்தேகிக்க கூடிய அளவுக்கு தகவல்கள் இல்லை.

மறுவிசாரணை வேண்டாம்

இதனால், மகாத்மா காந்தி உடலில், 4-வது குண்டு பாய்ந்ததற்கான சான்றுகள் இல்லை. அந்த கொலையில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் அப்போது கண்டுபிடித்துவிட்டனர். ஆதலால், மறு விசாரணை செய்ய வேண்டிய அவசியம இல்லை’’ எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!