
ரூ.500க்கு ஆதார் விவரங்களை விற்பனை செய்த விவகாரத்தை அம்பலப்படுத்திய ‘தி டிரிபியூன்’ ஆங்கில நாளேடு, அதன் நிருபர் மீது போலீசார் முதல் தகவல் தகவல் அறிக்கையை பதிவுசெய்துள்ளனர்.
ஆதார் வழங்கும் உதய் அமைப்பின் இணை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.500க்கு ...
பஞ்சாப்பில் இருந்து வெளியாகும் ‘தி டிரிபியூன்’ நாளேடு கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டது.
அதில், “ 500 ரூபாய் பணம் கொடுத்தால் கோடிக்கணக்கான மக்களின் ஆதார் விவரங்களைப் பெறமுடியும். 300க்கு ஆதார் விவரங்களை பெற்று அச்சடிக்கும் மென்பொருள் பெற முடியும்’’ என கள ஆய்வு செய்து செய்தி வௌியிட்டு இருந்தது. கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு இதன் மூலம் கேள்விக்குறியாகுமா என அச்சம் நிலவியது.
மறுப்பு
ஆனால், இந்த செய்தியை மறுத்த ஆதார் வழங்கும் உதய் அமைப்பு, இதுபோன்ற நடவடிக்கைகளில்ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
எட்வர்ட் ஸ்நோடன்
இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த அமெரிக்க உளவுதுறை ரகசியங்களை அம்பலப்படுத்தியஎட்வர்ட் ஸ்நோடன் “ வரலாற்றைப் பார்க்கும்போது, அரசு என்பது, மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று அதை ஆய்வு செய்து, தவறாகப் பயன்படுத்துவது என்பது இயல்பான ஒன்று’’ என்று தெரிவித்தார்.
வழக்குப்பதிவு
இந்நிலையில், இந்த செய்தியை வௌியிட்ட தி டிரிபியூன் நாளேடு, அதன் நிருபர் ரச்னா கைரா, அணில் குமார், சுனில் குமார், ராஜ் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் இணை ஆணையர் அலோக் குமார் கூறுகையில், “ ஆதார்சட்டத்தின்படி, மோசடி, ஏமாற்றுதல், போலியாக தயாரித்தல், சைபர் குற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் தி டிரிபியூன் நாளேடு, அதன் நிருபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
பாக்ஸ் மேட்டர்......
எடிட்டர் கில்ட் கண்டனம்
தி டிரிபியூன் நாளேடு, அதன் நிருபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருப்பதற்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள்(தி எடிட்டர் கில்ட் ஆப் இந்தியா) அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ ஆதார் முறைகேடு குறித்த செய்தியை அம்பலப்படுத்திய திடிரிபியூன் நாளேடு, நிருபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது என்பது, நியாயமற்றது, நீதிக்கு புறம்பானது, பத்திரிகை சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல். இந்த செய்தியை மக்கள் நலன் அடிப்படையில் வெளியிட்டனர். அதற்காக நிருபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது. இது குறித்து உதய்அமைப்பு தீவிரமான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அமைச்சர் தலையிட்டு நிருபர்கள், பத்திரிகை மீது செய்யப்பட்டுள்ள வழக்குப்பதிவை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.