கையில் Gun உடன் போஸ் கொடுக்கும் நாதுராம்! பேஸ்புக் புகைப்படத்தால் பரபரப்பு!

Asianet News Tamil  
Published : Jan 08, 2018, 02:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
கையில் Gun உடன் போஸ் கொடுக்கும் நாதுராம்! பேஸ்புக் புகைப்படத்தால் பரபரப்பு!

சுருக்கம்

Nathuram giving pose with gun in hand

சென்னை, கொளத்தூர் அருகே நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நாதுராம், துப்பாக்கியுடன் இருக்கும் தனது புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளான்.

சென்னை, கொளத்தூர் அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்கச் சென்றபோது சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

பெரியபாண்டியை சுட்டது யார்? என்பது குறித்த மர்மம் நீடித்துக்கொண்டே வந்த நிலையில், இது குறித்து ராஜஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பெரியபாண்டியன் உடலில் இருந்த குண்டு, காவல் ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியில் இருந்ததுதான் என்றும் முனிசேகர் தவறுதலாக சுட்டதால்தான் பெரியபாண்டி உயிரிழந்ததாகவும் ராஜஸ்தான் போலீஸ் கூறியது.

நாதுராம் உள்ளிட்ட கொள்ளையர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் மற்றும் உறவினர்கள் சிலரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில், முனிசேகர் தவறுதலாக சுட்டதால்தான் பெரியபாண்டி உயிரிழந்ததாக ராஜஸ்தான் போலீஸ் கூறியதை சென்னை போலீஸ் உறுதி செய்தது. அதாவது, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டது முனிசேகர்தான் எனவும் கொள்ளையன் நாதுராமை பிடிக்க முனிசேகர் சுட்டபோது குறிதவறி பெரிய பாண்டியன் உயிரிழந்துள்ளார் எனவும் சென்னை போலீஸ் உறுதிபட தெரிவித்திருந்தது. 

இதனைத் தொடர்ந்து, கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 3 பேர், ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 3 பேரையும் ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் ராஜஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையன் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் போலீசரும், தமிழக போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், கொள்ளையன் நாதுராம், தனது பேஸ்புக் பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளான். துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை, கொள்ளையன் நாதுராம், தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளான். 

கொள்ளையன் ஒருவன் தேடப்பட்டு வரும் நிலையில், துப்பாக்கியுடன் இருக்கும் தனது புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!