
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிச்சைக்காரர்கள் சிலர் சேர்ந்து, ஒரு ரூபாய் காசை செல்லாததாக அறிவித்துள்ளனர். அளவில் சிறியதாக இருப்பதால், ஒரு ரூபாய் காசை பிச்சையாக வாங்கமாட்டோம் என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் கூறுகையில், “ அளவில் சிறியதாக இருக்கும் ஒரு ரூபாயை நாங்கள் யாசகமாக இனி வாங்கப்போவதில்லை. சிறிய கடைகள், ரிக்ஷா ஓட்டுநர்கள் ,சாலை ஓரக் கடைகளில் இந்த சிறிய ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள். ஆதலால், இனி ஒரு ரூபாய் நாணயத்தை நாங்கள் பிச்சையாக ஏற்கமாட்டோம்’’ எனத் தெரிவித்தனர்.
இது குறித்து பிச்சைக்காரர் சுக்ரா மானி கூறுகையில், “ பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, ரூ.1000 நோட்டை செல்லாது என அறிவித்தார். அதேபோல், இப்போது நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு ரூபாய் நாணயத்தை செல்லாது என அறிவிக்கிறோம். இனி யாரும் ஒரு ரூபாய் நாணயத்தை பிச்சையாக ஏற்கமாட்டோம்’’ எனத் தெரிவித்தார்.