கோவில்களில் நூதன முடி திருட்டு : அப்படி என்னதான் முடியில் இருக்கிறது?

 
Published : Nov 20, 2016, 03:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
கோவில்களில் நூதன முடி திருட்டு : அப்படி என்னதான் முடியில் இருக்கிறது?

சுருக்கம்

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பின்னர், நடந்த கொள்ளை சம்பவங்களில் கூட பழைய ரூபாய் நோட்டுகளை திருடர்கள் சீண்டுவதில்லை, எனினும் அவர்கள் தற்போது புதிய வகை திருட்டுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீசைலம் கோயிலில் நுழைந்த திருடர்கள், அங்கு காணிக்கையாக பெறப்பட்டு 7 பைகளில் வைக்கப்பட்டிருந்த பக்தர்களின் தலைமுடியை தூக்கிச் சென்றுள்ளனர். அவற்றின் மதிப்பு 25 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.

முடி திருடும் சம்பவம் ஒன்றும் புதிதல்ல, இதைப்போன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருவது வாடிக்கையே. கடந்த ஜூலை மாதத்தில் தமிழகத்தின் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 மூட்டை முடி, மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல விசாகப்பட்டிணத்தின் புகழ்மிக்க ஆலயம் ஒன்றில் இருந்தும் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான முடி கொள்ளையடிக்கப்பட்டது.

பொதுவாக கோயில்களில், பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்படும் தலைமுடி சேமிக்கப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை அதிக ஏலம் விடப்படும். பெரும்பாலான கோவில்களில் இதுவே நடைமுறையில் உள்ளது.

என்னதான் இருக்கிறது ‘முடி’யில்?

முடியினை ஏலம் விடுவதன் மூலம் மட்டுமே தென் இந்திய கோவில்களின் ஆண்டு வருமானம் பல கோடி ரூபாய் என்பது வியக்கத்தக்க செய்தியாகும். முடியின் நீளத்திற்கு ஏற்ற மதிப்பு கொண்டது, முடி-க்கு என உலகலாவிய சந்தையும் இயங்கி வருகிறது. 18 முதல் 26 இன்ச் நீளமுள்ள முடி கிலோ ஒன்றிற்கு ரூ.16000 வரை விலை போகும், அதே நேரத்தில் 6 இஞ்ச் அளவுள்ள முடி கிலோவுக்கு ரூ.100 மட்டுமே விலை கிடைக்கும்.

தென் இந்திய கோவில்களே முடி சந்தையின் உலகலாவிய உற்பத்தி ஸ்தானமாக விளங்குகின்றன. உதாரணமாக உலகின் பணக்காரக் கடவுளாக விளங்கும் திருப்பதி கோவிலில் முடி வெட்டும் தொழிலாளர்கள் மட்டுமே 1000 பேர் உள்ளனர், கிட்டத்தட்ட 40,000 பேர் ஒரு நாளைக்கு முடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். 2016 - 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் முடி மூலம் 300 முதல் 400 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

யார் வாங்குகிறார்கள்:

இங்கிலாந்து நாடு மட்டுமே 60 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக, அதாவது கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்க்கு முடியை இறக்குமதி செய்கிறது, முடி இறக்குமதி செய்யும் நாடுகளில் உலக அளவில் 3வது இடத்தில் அது உள்ளது, முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் அமெரிக்கா மற்றும் சீனா அகியவை உள்ளன.

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!