ஷாக்கிங் நியூஸ்.. H3N2 வைரஸுக்கு இந்தியாவில் 2வது நபர் மரணம் - தீவிரமாக பரவுவதால் அதிர்ச்சி

Published : Mar 15, 2023, 01:07 PM IST
ஷாக்கிங் நியூஸ்.. H3N2 வைரஸுக்கு இந்தியாவில் 2வது நபர் மரணம் - தீவிரமாக பரவுவதால் அதிர்ச்சி

சுருக்கம்

மகாராஷ்டிராவில் உள்ள அஹ்மத்நகரைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரசால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

H3N2 Influenza A Virus, இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலாக உருவெடுத்துள்ளது H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்.

கடந்த சில வாரங்களாக இந்த H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமெடுத்து வருவதாகவும் மக்கள் அதிக விழிப்புணர்வுடன் சுகாதாரமாக இருந்து தற்காத்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அஹ்மத்நகரைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர் நேற்று இறந்தார்.

H3N2 வைரஸால் ஏற்பட்ட முதல் சந்தேக மரணம் என்று மகாராஷ்டிரா தெரிவித்துள்ளது. அவர் கொரோனா மற்றும் H3N2 ஆகிய இரண்டிற்கும் சோதனை செய்திருந்தார். சமீபத்திய மரணத்திற்குப் பிறகு அகமதுநகர் சுகாதாரத் துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. H3N2 காரணமாக இந்தியாவில்  இதுவரை இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளது.

23 வயதான எம்பிபிஎஸ் மாணவர் ஒருவர் கடந்த வாரம் நண்பர்களுடன் சுற்றுலாவிற்கு கொங்கனில் உள்ள அலிபாக் சென்றிருந்தார். திரும்பிய பிறகு, அவரது உடல்நிலை மோசமடைந்தது, அவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அகமதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க..ஃபர்ஸி வெப் சீரிஸை போல ரோட்டில் பணத்தை வீசிய பிரபல யூடியூபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

அவரது பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்தத்தில் H3N2 வைரஸ் இருப்பது தெரியவந்தது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுவரை ஏற்பட்ட 2 மரணங்களில் ஒன்று கர்நாடகாவிலும் மற்றொன்று ஹரியானாவிலும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சகம் நோயாளிகளை வகைப்படுத்துதல், சிகிச்சை நெறிமுறை மற்றும் காற்றோட்ட மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் மற்றும் NCDC இன் இணையதளத்திலும் வழங்கியுள்ளது. நாட்டில் 90 பேர் H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க..பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்.. அடேங்கப்பா இவரா.? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!