ஞானவாபி மசூதியில் சிவலிங்கமா ? எப்போது வெளியாகிறது தீர்ப்பு ? உச்சகட்ட பரபரப்பு

By Raghupati RFirst Published Oct 7, 2022, 7:03 PM IST
Highlights

ஞானவாபி மசூதி வழக்கில் முக்கிய தீர்ப்பை விரைவில் கொடுக்க உள்ளது வாரணாசி நீதிமன்றம்.

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.  1669 ஆம் ஆண்டில் கோயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றது.

அங்கு ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த அம்மன் சிலைக்குத் தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐந்து இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க..ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !

பிறகு பலத்த பாதுகாப்பிற்கு இடையில், மேற்கொள்ளப்பட்ட மசூதி வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த குளத்திற்குச் சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கள ஆய்விற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றமே இதுகுறித்து முடிவு செய்ய உத்தரவிட்டுருந்தது. இந்த நிலையில், சிவலிங்கத்தின் வயதை கண்டறிய கார்பன் டேட்டிங் முறைக்கு உத்தரவிடகோரி வழக்கில் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கிறது வாரணாசி நீதிமன்றம்.

இதையும் படிங்க..சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?

click me!