தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு ஆம்லெட்டை 10 நிமிடத்தில் சாப்பிடுபவருக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் பரிசு என்று போட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஆம்லெட், ஆஃபாயில் போன்றவற்றை ஒவ்வொருவரும் ஒரு விதமாக ரசித்துச் சாப்பிடுவார்கள். சிலர் அப்படியே அள்ளி எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்கள். சிலர் கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிக் கிள்ளி ருசித்துச் சாப்பிடுவார்கள். இப்படி விதவிதமாக சாப்பிடுபவர்களை நாம் பார்த்திருப்போம்.
ஆனால், தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் இந்த ஆம்லெட்டை வைத்து ஒரு வினோதமான போட்டி நடந்துள்ளது. அதாவது, ஒரு ஆம்லெட்டை 10 நிமிடத்தில் சாப்பிடுபவருக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் பரிசு என்று போட்டி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி அருகே உள்ள குர்கானில் இந்த விசித்திரமான போட்டி நடந்தது. அந்த உணவகத்தில் வழங்கப்படும் ஒரு ஆம்லெட்டின் விலை ரூ.440! விலையைக் கேட்டால் மலைப்பா இருக்கா... ஆனால், மெகா சைஸில் இந்த ஆம்லெட்டைச் செய்யும் விதத்தைப் பார்த்தால் இன்னும் வியப்பாக இருக்கும்.
தமிழ்நாட்டு கிராமங்கள் எல்லாம் மோசமான வறுமையில் உள்ளன: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை
இந்த பிரம்மாண்ட ஆம்லெட்டின் செய்முறை வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. வீடியோவில் ஆம்லெட் செய்யும் சமையல் கலைஞர் கௌரவ் வாசன் இந்த ஆம்லெட்டை 10 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடிப்பவருக்கு 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சொல்கிறார்.
இந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது. சுமார் 70 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். வீடியோவுக்கு வந்துள்ள கமெண்ட்களில் பலர் இவ்வளவு ஹெவி ஆம்லெட்டை சாப்பிட முடியுமா என்று ஷாக் ஆகியுள்ளனர். இதை பத்தே நிமிடத்தில் சாப்பிட முயற்சி செய்வது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று சிலர் அலர்ட் கொடுத்துள்ளனர்.
இதுபோன்ற சாப்பிடும் போட்டிகள் டெல்லிக்குப் புதிது அல்ல. கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஓர் உணவகத்தில் 31 முட்டைகளால் செய்யப்பட்ட ஆம்லெட்டை முழுதும் சாப்பிட்டு முடிப்பவருக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு காணிக்கையாக வந்த வெள்ளித் துடைப்பம்!