13 Year Old Girl Tortured : வீட்டில் வேலைக்காக அமர்த்தப்பட்ட 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறுகிராம் பகுதியை உலுக்கியுள்ளது. கொடூர காயங்களுடன் அந்த சிறுமி இப்பொது போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
குருகிராமில் 13 வயது சிறுமியின் ஆடையை அவிழ்த்து, அவரை இரும்பு கம்பியால் தாக்கி, வாயில் டேப் ஒட்டி கொடுமைப்படுத்தி, ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு மகன்கள் அவரை வீட்டு உதவியாளராக வைத்திருந்ததாக அந்த சிறுமி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சிறுமியின் தாய் அளித்த தகவலின்படி அந்த சிறுமிக்கு உண்பதற்கு கூட மிக குறைவான அளவில் தான் உனக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
குருகிராமில் உள்ள கியூபர் சிட்டியில் உள்ள செக்டார் 57ல் உள்ள ஒரு வீட்டில் தான் அந்த சிறுமி வேலை செய்து வந்துள்ளார். அந்த மைனர் சிறுமி, அவர் வேலை செய்து வந்த வீட்டில் இருந்த பெண்மணியின் இரண்டு மகன்களால் ஆடைகளை அவிழ்த்து, வீடியோ எடுத்து கொடுமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.300 கோடி பறிமுதல்.. வருமான வரி சோதனையில் இதுவே முதன்முறை.. யார் இந்த தீரஜ் சாஹு?
மேலும் அவர்களின் செயல்களுக்கு அந்த பெண் கீழ்ப்படியவில்லை என்றால், அந்த பெண்ணை விபச்சார விடுதிக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த சிறுமியை காப்பாற்ற குறிப்பிட்ட அந்த குருகிராம் வீட்டை அடைந்தபோது, சிறுமியின் வாயில் டேப் ஒட்டப்பட்டு, ஒரு அறைக்குள் பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
சமைப்பது, துவைப்பது மற்றும் அவ்வீட்டில் உள்ள நாயைப் பராமரிப்பது வரை அனைத்து வகையான வேலைகளையும் அந்த குடும்பத்தினர் தன்னைச் செய்ய வைத்ததாக சிறுமி போலீசாரிடம் கூறினார். அந்த குருகிராம் குடும்பத்தினர் சிறுமியின் கைகளில் ஆசிட் ஊற்றியதாகவும், இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியதாக செய்தி வெளியாகியுள்ளது.
அளிக்கப்பட்ட போலீஸ் புகாரில், சிறுமியின் தாய், கடந்த நான்கு மாதங்களாக குருகிராம் குடும்பத்தினர் தனது மகளை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும், கடைசியாக அவர்கள் கொடுத்த சம்பளம் நான்கு மாதங்களுக்கு முன்புதான் என்றும் கூறியுள்ளார். 13 வயது சிறுமி, இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) அதிகாரியின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.
போதை ஊசி, மாத்திரை விற்பனை.. வசமாக சிக்கிய 3 பேர்.. தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?
அந்த அதிகாரியின் வீட்டில் வேலைபார்த்து வந்த அந்த தாய், தன் மகளை நிலைகுறித்து அவரிடம் கூறி கண்ணீர்விட்டுள்ளார். இதனை அடுத்து அந்த அதிகாரி மேற்கொண்ட முயற்சியால் அந்த சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான (போக்சோ) சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.