2 ஆண்டு சிறைக்கு எதிரான ராகுலின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு எப்போது? தேதியை சொன்ன குஜராத் உயர்நீதிமன்றம்

By Narendran S  |  First Published May 2, 2023, 7:13 PM IST

சிறை தண்டனைக்கு எதிரான ராகுலின் மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 


சிறை தண்டனைக்கு எதிரான ராகுலின் மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ஒரு மாதத்திற்குள் நிறுத்தி வைத்ததுடன், ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணம்: உச்சநீதிமன்றம் பரிசீலிக்க வேண்டிய 3 கேள்விகள்..

Tap to resize

Latest Videos

இதனிடையே ராகுல் காந்தியின் எம்.பி.பதவியும் பறிக்கப்பட்டது. இதனையடுத்து சூரத் நீதிமன்றத்தில் ஆஜராகி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சூரத் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் ராகுல்காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: கர்நாடகாவிற்கு நீங்க என்ன செஞ்சீங்க.? இதை முதல்ல சொல்லுங்க மோடி!! வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி

அப்போது, ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் தரப்ப்டவில்லை என அவரது சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக்சிங்வி வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி, 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தியின் வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்க மறுப்பு தெரிவித்தது. மேலும் மே 4 ஆம் தேதி முதல் தொடங்கும் கோடை விடுமுறைக்கு பின், மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!