
தள்ளுவண்டிகளில் அசைவ உணவுகள் ( Non-veg foods ) விற்பதற்கு தடை விதித்த அகமதாபாத் நகராட்சி நிர்வாகத்திற்கு ( Ahmedabad corporation ) குஜராத் உயர்நீதிமன்றம் ( Gujarat High Court ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்? என பல அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. குஜராத்திலுள்ள வதோதரா, ராஜ்கோட், பவ்நகர், ஜூனாகாத் உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில் தெருவோரமாக அசைவ உணவை வழங்கும் தள்ளு வண்டி கடைகளுக்கு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு அருகேயுள்ள பகுதிகளில் இருக்கும் கடைகளுக்குத்தான் இந்த தடை என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்த அசைவ விற்பனையும் பாதிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கான காரணம் என்ன என்பது குறித்து பல கேள்விகள் எழுந்ததோடு பல விவாதங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தள்ளுவண்டிகளில் அசைவ உணவுகள் ( Non-veg foods ) விற்பதற்கு தடை விதித்த அகமதாபாத் நகராட்சி நிர்வாகத்திற்கு ( Ahmedabad corporation ) குஜராத் உயர்நீதிமன்றம் ( Gujarat High Court ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்? என பல அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தள்ளுவண்டிகளில் அசைவ உணவுகள் விற்பதற்கு அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. இதனை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும் அந்த மனுவில், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளதோடு நிர்வாகத்தினர் அத்துமீறி நடந்து கொள்வதாகவும், கடைகளை அடித்து நொறுக்கி தள்ளுவண்டிகளை பறிமுதல் செய்யும் அதிகாரிகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பைரன் வைஷ்ணவ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி ஆணையரை இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அவரிடம், நீதிபதி பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார். குறிப்பாக, உங்களுக்கு என்னதான் பிரச்சனை? உங்களுக்கு அசைவம் பிடிக்காது, அதுதானே? மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், இந்த சாப்பாட்டை தான் சாப்பிட வேண்டும், அசைவ சாப்பாடுகளை சாப்பிடக் கூடாது என்று நீங்கள் எப்படி அவர்களின் விருப்பத்தை கட்டுப்படுத்த முடியும்? நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, இன்று அசைவ உணவு சாப்பிட தடைபோடுபவர்கள், நாளை வெளியிலேயே சாப்பிட கூடாது என்று சொல்ல முடியுமா? அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கரும்பு ஜூஸ் விற்க தடை விதிக்க முடியுமா? என்று கேள்விகளை எழுப்பினார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், விரைவில் இது தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு ஆதரவாக தான் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.