கொரோனா 2ம் அலை தீவிரம்: பேருந்துகள் இயங்காது... தியேட்டர்கள் மூடல்... முதல்வரின் அவசர உத்தரவு!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 18, 2021, 6:46 PM IST
Highlights

அதுமட்டுமின்றி அகமதாபாத் நகரில் உள்ள உயிரியல் பூங்காக்களையும், கன்காரியா ஏரிப்பகுதியையும், மாநகராட்சி பூங்காக்களையும் இம்மாதம் 31-ந்தேதி வரை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கோரதாண்டவம் ஆடிய கொரோனா தொற்றால் மக்கள் அனுபவித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. கொரோனா லாக்டவுனால் பொருளாதார சீரழிவு, வேலையில்லா திண்டாட்டம் என அனைத்தும் அதிகரித்தது. கடந்த செப்டம்பரில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டது. அப்போது நாளொன்றுக்கு 90,000 முதல் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. 

ஆனால் தற்போது தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உருவாவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து குஜராத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொற்றின் தீவிரம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பரவல் 1,122 ஆக உயர்ந்துள்ளது.  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த ஊரடங்கு ஊத்தரவும் மேலு இரண்டு மணிநேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இருந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி அகமதாபாத் நகரில் உள்ள உயிரியல் பூங்காக்களையும், கன்காரியா ஏரிப்பகுதியையும், மாநகராட்சி பூங்காக்களையும் இம்மாதம் 31-ந்தேதி வரை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு தளங்கள் அனைத்தையும் மூடவும், கடைகள் , சந்தைகளை கட்டுப்பாடுகளுடன் நடத்தவும் அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அகமதாபாத் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேருந்து மற்றும் விரைவு பேருந்து சேவை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

click me!