இந்தியாவில் நடக்கவிருந்த பெரும் சதி முறியடிப்பு: 3 தீவிரவாதிகள் கைது - குஜராத் ATS அதிரடி

Published : Nov 09, 2025, 01:32 PM IST
Arrest

சுருக்கம்

குஜராத்தின் அகமதாபாத்தில், நாடு தழுவிய தாக்குதல்களுக்கு திட்டமிட்ட மூன்று தீவிரவாதிகளை பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) கைது செய்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், தீவிரவாத சதி ஒன்றை முறியடிக்கும் நடவடிக்கையில் ஏடிஎஸ் (Anti-Terrorism Squad) மூன்று பேரை கைது செய்துள்ளது. இவர்களில் இருவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள ஒருவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. 

கடந்த ஒரு வருடமாக இந்த குழு ஏடிஎஸ் கண்காணிப்பில் இருந்தது. இவர்கள் ஆயுத பரிமாற்றத்திற்காக குஜராத்துக்கு வந்ததாகவும், நாடு முழுவதும் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஏடிஎஸ் வெளியிட்ட தகவலில், “மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த ஒரு வருடமாக எங்கள் ரேடாரில் இருந்தனர். 

வழங்கும் போது பிடிக்கப்பட்டனர். நாட்டின் பல பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத இயக்கம் செயல்படத் தொடங்கியிருப்பதாக உளவுத்துறைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந்திய பாதுகாப்பு படைகள் "ஆப்ரேஷன் சிந்தூர்" மூலம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை ஒழித்த ஆறு மாதங்களுக்கு பிறகு, புதிய உளவுத் தகவல் ஒரு பெரிய சதியை வெளிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தைபா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-மொஹம்மது (JeM) அமைப்புகள் ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் ஒருங்கிணைந்த தாக்குதல்களை திட்டமிடுவதாக அறிக்கை கூறுகிறது.

மேலும், ISI மற்றும் அதன் சிறப்பு பிரிவு SSG இந்த தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிக்கின்றன எனவும், ட்ரோன் நடவடிக்கைகள் செப்டம்பர் மாதத்திலிருந்து அதிகரித்துள்ளதாகவும் உளவுத்துறைகள் தெரிவித்துள்ளன. லஷ்கர்-இ-தைபா குழு, இந்திய எல்லைகளின் வழியாக ட்ரோன்களைப் பயன்படுத்தி ரகசியமாக கண்காணிப்பு நடத்தியது வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் (PoK) போர்ட்டர் ஆக்ஷன் டீம் (BAT) குழுவினரின் புதிய இயக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!
இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!