மந்த நிலை குறித்து புலம்பும் பொருளாதார புள்ளி... சிறைக்குள் இருந்து அதிரும் குரல் மோடிக்கு கேட்குமா..?

By vinoth kumarFirst Published Oct 15, 2019, 3:34 PM IST
Highlights

பொருளாதார மந்த நிலைக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பும், அதை தவறாக செயல்படுத்தியதுமே காரணம் என மத்திய அரசு மீது திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 

பொருளாதார மந்த நிலைக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பும், அதை தவறாக செயல்படுத்தியதுமே காரணம் என மத்திய அரசு மீது திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 

ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் டுவிட்டர் பக்கம் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.  

இந்நிலையில், நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்கான காரணம் என்ன என்பது குறித்து ப.சிதம்பரம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பொருளாதார மந்த நிலைக்கு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையும், அதை தவறாக செயல்படுத்தியது தான் முக்கிய காரணம். ஜி.எஸ்.டி.யை தவறாக செயல்படுத்தியதை பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ஒப்புக் கொண்டுள்ளார். 

ஆனால், அவர் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மறந்து விட்டார். அனைவரது கருத்துகளின் படி ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டது என நிதி அமைச்சர் நிர்மலா சொல்வது தவறு. ஜி.எஸ்.டி. மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்ததாக டுவிட்டரில் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

click me!