வேளாண் கருவிகளுக்கு 5 %  தங்கத்துக்கு 3 % ஜி.எஸ்.டி. வரி...பிஸ்கெட், செருப்புக்கு எவ்வளவு தெரியுமா?

First Published Jun 3, 2017, 10:56 PM IST
Highlights
GST for Farm equipments. Buiscut. gold nad cheppals


நாடுமுழுவதும் ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் ஜி.எஸ்.டி. வரி முறையில், வேளாண் கருவிகளுக்கு 5 சதவீதம் வரியும், தங்கம், வைரம், விலை உயர்ந்த கற்களுக்கு 3 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதே சமயம், பிஸ்கெட்டுக்கு 18 சதவீத வரியும், ரூ.500 விலை குறைவான விலையுள்ள செருப்புகளுக்கு 5 சதவீதம் வரியும், அதற்கு மேல் விலை உள்ள செருப்புகளுக்கு 18 சதவீத வரியும் விதிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை முதல் அமல்

கடந்த 1947ம் ஆண்டுக்கு பின் நாட்டில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாக ஜி.எஸ்.டி.வரி அமைந்துள்ளது. மறைமுக வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டு நாடுமுழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

4 வகை வரி

இந்த ஜி.எஸ்.டி. வரியில் பொருட்கள் ,சேவைகளுக்கு 5, 12, 18, 28 என 4 வகைகளில் வரிகள் விதிக்கப்பட உள்ளன. எந்தெந்த பொருட்களுக்கு எத்தனை சதவீதம் வரி விதிப்பது, ஜி.எஸ்.டி. விதிமுறைகள், சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து முடிவு செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது.

1200 பொருட்கள்

இந்த. ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிதலைவராகவும், மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் இருந்தன.

இதுவரை ஜி.எஸ்.டி. கவுன்சில் 14 முறை கூடி, 1200 பொருட்கள், 500 சேவைகளுக்கான வரி விகிதங்களை நிர்ணயம் செய்தது.

15-வது கூட்டம்

இந்நிலையில் தங்கம், பிஸ்கெட், செருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான வரியை நிர்ணயிக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 15-வது கூட்டம் நேற்று டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தின் முடிவில் அனைத்து மாநிலங்களும் ஜூலை 1-ந் தேதி ஜி.எஸ்.டி. வரியை தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த சம்மதம் தெரிவித்தன.

வேளாண் கருவிகள்

மேலும், விவசாய கருவிகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியும், தங்கம், வைரம், கற்கள் பதிக்கப்பட்ட நகைகளுக்கு 3 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகக்குறைவு

தங்கநகை உற்பத்தியாளர்கள் 2 சதவீதம் வரி விதிக்க அரசை கோரியிருந்த நிலையில் 3 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரியில் குறைந்தபட்ச வரியை 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதையும் குறைத்து 3 சதவீதமாக தங்கம், வைரம் நகைகளுக்குவிதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வேளாண் கருவிகளுக்கு 5 சதவீதம் வரிவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிஸ்கெட்

மேலும், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பிஸ்கெட்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

செருப்பு

ரூ. 500 வரை விலை உள்ள செருப்புகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி.வரியும், ரூ.500க்குஅதிகமான விலை உள்ள செருப்புகளுக்கு 18 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

ரெடிமேட் ஆடைகள்

ரெடிமேட் ஆடைகளுக்கு 12 சதவீதம் வரியும், ரூ.1000க்கு குறைவான விலையுள்ள ஆடைகள், நூல், பருத்தி, மனிதனால் கையால் உருவாக்கப்படும் நூல் 5 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. சிந்தடிக் நூலுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சணலுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாநிலங்கள் தயார்

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள நிதி அமைச்சர் தாமஸ் இசாக் கூறுகையில், “ ஜி.எஸ்.டி. விதிமுறைகள் குறித்து விவாதித்து, இறுதிமுடிவு எடுத்துள்ளோம். ஜி.எஸ்.டி.க்கு மாறுவது குறித்த விதிமுறைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஜூலை 1-ந்தேதி நடைமுறைப்படுத்த அனைத்து மாநிலங்களும் சம்மதம் தெரிவித்துள்ளன’’ எனத் தெரிவித்தார்.

tags
click me!