மாநிலங்களுக்கு வருவாய் இழப்பீடு ஈடு செய்யும் சட்டம்…. ஜி.எஸ்.டி.. கவுன்சில் ஒப்புதல் அளித்தது

 
Published : Feb 18, 2017, 10:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
மாநிலங்களுக்கு வருவாய் இழப்பீடு ஈடு செய்யும் சட்டம்…. ஜி.எஸ்.டி.. கவுன்சில் ஒப்புதல் அளித்தது

சுருக்கம்

மாநிலங்களுக்கு வருவாய் இழப்பீடு ஈடு செய்யும் சட்டம்…. ஜி.எஸ்.டி.. கவுன்சில் ஒப்புதல் அளித்தது

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவைஜி.எஸ்.டி. மாநிலங்களில் அமல்படுத்தும் போது ஏற்படும் வருவாய் இழப்பீட்டை ஈடு செய்யும் சட்டத்துக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கூடுவதற்கு முன்பாக, ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மார்ச் 4, 5 தேதிகளில் கூட உள்ளது. அப்போது, ஜி.எஸ்.டி. சட்டத்தின் முக்கிய துணைச்சட்டங்களான மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும்.

 ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 10-வது கூட்டம் நேற்று நடந்தது. நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதால், ஏற்படும் வருவாய் இழப்பு, வரியை வசூல் செய்தல் ஆகியவை குறித்து எந்த கருத்து ஒற்றுமையும் மாநிலங்கள், மத்தியஅரசுக்கு இடையே இதுவரை நடந்த 9 ஜி.எஸ்.டி.  கவுன்சில் கூட்டத்தில் எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில், 10-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

இந்நிலையில், நேற்று நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் வரைவு சட்டத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த கூட்டம் முடிந்தபின் நிதி அமைச்சரும், ஜி.எஸ்.டி. குழுவின் தலைவருமான அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறுகையில், “ சட்டப்படி உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா குறித்து குழுவில் அனைத்தை விதத்திலும் ஆலோசிக்கப்பட்டது. இதில் ஜி.எஸ்.டி. குழுவின் முதன்மைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனி அடுத்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இந்த வரைவு மசோதாவின்படி, மாநிலங்கள் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தும்  5 ஆண்டுகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இந்த சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தவுடன், ஜி.எஸ்.டி. வரியின் 4 வகையான வரியான 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகியவை குறித்து முடிவு செய்யப்படும்'' எனத் தெரிவித்தார்.

இதில் மத்திய ஜி.எஸ்.டி. வரி என்பது மத்தியஅரசாலும், மாநிலங்கள் ஜி.எஸ்.டி.வரி என்பது மாநிலங்களாலும், ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி என்பது மாநிலங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் பரிமாறப்படும் போது விதிக்கப்படும். இந்த துணைச்சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!