ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டது ஜிஎஸ்டி வரி அமல்…பேச்சு வார்த்தையில் தொடரும் இழுபறி

Asianet News Tamil  
Published : Jan 16, 2017, 07:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டது ஜிஎஸ்டி வரி அமல்…பேச்சு வார்த்தையில் தொடரும் இழுபறி

சுருக்கம்

ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டது ஜிஎஸ்டி வரி அமல்…பேச்சு வார்த்தையில் தொடரும் இழுபறி

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி  வரும் ஜூலை மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும் என  மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

டெல்லியில் இன்று ஜிஎஸ்டி வரியை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. ஏற்கனவே 9 முறை இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஆடிவு எட்டப்படாத நிலையில் இன்று நடைபெற்ற 10 ஆவது கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை.

மாநிலங்களுக்கு இடையே சரக்கு மற்றும் சேவைகள் பரிமாற்றத்தின் போது விதிக்கப்படுவதே ஜிஎஸ்டி வரி எனப்படுகிறது. ஆனால் இந்த வரி தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே உடன்பாடு ஏற்படாததால் இத்திட்டம் அமல் படுத்தப்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இன்றைய கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அருண் ஜெட்லி, ஜிஎஸ்டி வர்த்தகத்தில் ரூ. 1.5 கோடி அல்லது 90 சதவீதத்துக்கு குறைவான வர்த்தகம் மாநில அரசாலும், 10 சதவீத வர்த்தகம் மத்திய நிர்வாக அதிகாரிகளாலும் ஆய்வு செய்யப்படும் என்றும்  ரூ. 1.5 கோடிக்கு அதிக அளவில் நடக்கும் வர்த்தகம் மத்திய, மாநில அரசுகளால் 50:50 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர். மேற்குவங்க மாநிலம் மட்டும் ரூ. 1.5 கோடிக்கு குறைவான வர்த்தகத்தை பகிர்ந்து கொள்வதில் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இன்றைய கூட்டத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மாநிலங்களுக்கு இடையில் முடிவு எட்டப்படாததால் வரும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி அமல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?