ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிய ISRO.. ஒரே நேரத்தில் 6 டன் எடை கொண்ட 36 செயற்கைகொள்களை ஏவ தயாராகும் GSLV MK111..

By Ezhilarasan Babu  |  First Published Oct 6, 2022, 6:39 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)இந்த மாதம் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த One Web நிறுவனத்தில் 36 செயற்கைக்கோள்களை இந்தியாவின் சக்திவாய்ந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த உள்ளது. 


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)இந்த மாதம் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த One Web நிறுவனத்தில் 36 செயற்கைக்கோள்களை இந்தியாவின் சக்திவாய்ந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த உள்ளது. இதற்காக ஜியோசின்கரோன்ஸ் செயற்கைக்கோள்  வெளியீட்டு வாகனம் தயாராகி வருகிறது.

இஸ்ரோ வெளியீட்டுள்ள  தகவலின்படி,  இங்கிலாந்தைச் சேர்ந்த தகவல் தொடர்பு நிறுவனமான One Web 36  பிராட்பேண்ட் செயற்கைக்கோள்கள் அக்டோபர் மாதம் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இஸ்ரோவின் வணிக பிரிவான நியூஸ்பேஸ்  இந்தியா லிமிடெட் ( NSIL) உடன் One Web 2 ஏவுகணை சேவை ஒப்பந்தம் செய்துகொண்டது.  இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த செயற்கை கோள்கள் ஏவப்பட உள்ளன. 

Latest Videos

undefined

செப்டம்பர் 20 அன்று பேலோடு  இந்தியாவில் அதன் இலக்கை பாதுகாப்பாக அடைந்துவிட்டதாக One Web நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு one web launch  என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த செயற்கைக்கோள்கள் ISRO  வின்  கனமான ராக்கெட் ஆன launch vehicle 3(LVM) என்று அழைக்கப்படும்.  ஜியோ சின்கரோன்ஸ் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் MK III (GSLV MKiii)  மூலம் ஏவப்பட உள்ளது.  இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுகணை வளாகத்தில் ஜிஎஸ்எல்வி ஏவுகணை வாகனம் அசெம்பெள் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: பரபரப்பு.. பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளானது..

அடுத்த சில நாட்களில் அதன் அசம்பளிங் நிறைவடைகிறது. இரண்டு திடமான ஸ்ட்ராப் ஆன் பூஸ்டர்கள் மற்றும் LVM3  திட மற்றும் திரவ எரிபொருள் என்ஜின்கள் உடன் இந்த ராக்கெட் ஏவப்பட்ட உள்ளது. சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டரில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இவைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட உள்ளன, வரும் நாட்களில் ஏவுகணை வாகனத்தில் கிரையோஜெனிக் ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெற உள்ளது.  மொத்தம் 36 செயற்கை கோள்களுடன் பேலோடு ஃபேரிங்  அசெம்பிள் செய்யப்படவுள்ளது.  அக்டோபர் 3ஆம் தேதி One Web, 36 செயல்கள் கோள்களும் சோதனையை வெற்றிகரமாக முடித்த பின்னர் ராக்கெட்டின் டிஸ்பென்சரில் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: திடீரென்று வந்த வெள்ளம்.. நடு ஆற்றில் சிக்கிய கார்.. மரத்தில் ஏறி தப்பித்த தம்பதியினர்.. திக் திக் நிமிடங்கள்.

இந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் என்பது 640 டன் எடையுள்ள லிப்ட் ஆப், திட மற்றும் திரவ மற்றும் கிரையோஜெனிக் இயந்திரங்களை பயன்படுத்தும் மூன்று நிலை கனரக ஏவுகணை வாகனமாகும். இது 49.13 மீட்டர் உயரம் கொண்டது ஆகும்.  தற்போது மொத்தம் இந்த திட்டத்தில் 428 செயற்கைக்கோள்கள் உள்ளன.  மொத்தம் 648 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டம் வைக்கப்பட்டுள்ளது.  One Web நிறுவனம் ஆரம்பத்தில் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸை  அணுகியது. ஆனால் ரஷ்ய உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

அதன் பின்னர் One Web நிறுவனம் இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் சிறப்புகள்:

முதல் முறையாக ஒரு இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள பேலோடு ஏற்றிச் செல்கிறது. One Web நிறுவனம் தனது செயற்கைக் கோள்களை சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முதல் முறையாக இந்திய ராக்கெட்டைப் பயன்படுத்துகிறது. இந்திய விண்வெளித் துறையின் வணிகப் பிரிவான NSIL  மற்றும் முதல்முறையாக GSLV MKIII  குறைந்த புவி சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. 

36  செயற்கைகோள்களின் மற்றொரு தொகுப்பு ஜனவரி 2023 -ல் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.  One Web செயற்கைக்கோள் நிறுவனம் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக குறைந்த புவி சுற்றுப்பாதையில் மொத்தம் 650 செயற்கைகோள்களின் தொகுப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!