#GretaThunbergExposed இந்தியாவை உள்நோக்கத்துடன் அவதூறு செய்ய முயன்ற க்ரெட்டா துன்பெர்க்.! குட்டு அம்பலப்பட்டது

By karthikeyan VFirst Published Feb 4, 2021, 11:19 AM IST
Highlights

உலகளாவிய பிரச்சார குழுவில் இருந்துகொண்டு, இந்தியாவை வேண்டுமென்றே அவதூறு செய்யும் க்ரெட்டா துன்பெர்க்கின் குட்டு உடைந்தது.
 

மத்திய அரசு கொண்டுவர முனையும் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் 2 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியும், அப்போது வெடித்த வன்முறையும், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. 

விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச அளவில் பிரபலங்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். வெளிநாட்டை சேர்ந்த பிரபல பாடகியும், கலைஞருமான ரிஹானா, ”இணையதள துண்டிப்பு குறித்து ஏன் யாரும் பேசவில்லை” என்று டுவீட் செய்திருந்தார். அவரது டுவீட்டுக்கு எதிராகவும் ஆதரவாகவும் இந்தியர்கள் பலர் டுவீட் செய்திருந்தனர்.

அதேபோல ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் க்ரெட்டா துன்பெர்க்கும், விவசாயிகள் போராட்டம் குறித்து, இந்திய விவசாயிகள் போராட்டத்தில் நாங்களும் துணை நிற்கிறோம் என்று பதிவிட்டிருந்தார். 

We stand in solidarity with the in India.
https://t.co/tqvR0oHgo0

— Greta Thunberg (@GretaThunberg)

அத்துடன் நிற்காமல், இந்தியாவின் ஆளுங்கட்சியான பாஜகவை பாசிச கட்சி என்று ஒரு டுவீட்டில் பதிவிட்ட க்ரெட்டா துன்பெர்க், இந்திய அரசாங்கத்தின் மீது எவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியும் என்பதையும், இந்திய அரசின் மீது சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் செயல் திட்டத்தையும் பகிர்ந்தார் க்ரெட்டா துன்பெர்க். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த டுவீட் நீக்கப்பட்டது. அதன் ஸ்க்ரீன்ஷாட் இதோ..

க்ரெட்டா துன்பெர்க்கின் முதல் டுவீட் விவசாயிகளின் மீதான அக்கறை போன்று பார்க்கும் மக்களுக்கு தெரிந்தாலும், அவரது அடுத்தடுத்த டுவீட்டுகள், இந்தியாவை வேண்டுமென்றே அவதூறு செய்யும் நோக்கில் பதிவிடப்பட்டவை என்பதும், அவரது நோக்குமும் அதுதான் என்பதும் அம்பலப்பட்டது.

இந்தியாவை அவதூறு செய்ய க்ரெட்டா துன்பெர்க் போன்ற அந்நிய சக்திகள் ஒரு குழுவாக செயல்படுகிறது என்பதை அறிந்துதான், இந்தியாவின் உள்விவகாரங்களில் அந்நிய சக்திகள் தலையிட வேண்டாம். எங்கள் நாட்டு பிரச்னையை எங்களுக்கு இணக்கமாக தீர்த்துக்கொள்ள எங்களுக்கு தெரியும். அதற்கான தகுதி எங்களுக்கு இருக்கிறது என்று அந்நிய சக்திகளின் வாயை அடைக்கும் வகையில், சச்சின் டெண்டுல்கர்  மற்றும் லதா மங்கேஷ்கர் ஆகிய இந்திய பிரபலங்கள் டுவீட் செய்தனர்.
 

click me!