அயோத்தி ராமர் கோவில் தான் இந்தியாவின் தேசிய கோவில்..! 2023ல் கோவில் திறக்கப்படும்.. யோகி ஆதித்யநாத் பேச்சு

Published : Feb 18, 2022, 05:32 PM ISTUpdated : Feb 18, 2022, 06:00 PM IST
அயோத்தி ராமர் கோவில் தான் இந்தியாவின் தேசிய கோவில்..! 2023ல் கோவில் திறக்கப்படும்.. யோகி ஆதித்யநாத் பேச்சு

சுருக்கம்

2023 ஆம் ஆண்டுக்குள் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் தயாராகிவிடும் என்றும் இந்த ராமர் கோயில் இந்தியாவின் தேசிய கோயிலாக‌ இருக்கும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

2023 ஆம் ஆண்டுக்குள் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் தயாராகிவிடும் என்றும் இந்த ராமர் கோயில் இந்தியாவின் தேசிய கோயிலாக‌ இருக்கும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, என உத்தரப்பிரதேச தேர்தல் களம் பாஜக நட்சத்திரங்களால் நிரம்பி வருகிறது.  உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கார்ஹலில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

இங்கு தான் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அப்போது பேசிய அவர், 2023 ஆம் ஆண்டுக்குள் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் தயாராகிவிடும். இந்த ராமர் கோயில் இந்தியாவின் தேசிய கோயிலாக‌ இருக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய யோகி ஆதித்யநாத், கர்ஹால் மட்டுமல்ல இந்த மாவட்டம் முழுதிலும் பாஜக வெல்லும். கர்ஹால் சட்டசபைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் தங்கள் உடனடி தோல்வியைக் கண்டு பொறுமை இழந்துள்ளனர். பாஜக மத்திய அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் மீதான தாக்குதலே, அவர்களது கோழைத்தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர்கள் அனைவரும், தேர்தலின் போது வெளியே வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தேர்தல் முடிவுகள் வரும் நாளான‌ மார்ச் 10 ஆம் தேதிக்குப் பிறகு புல்டோசர்களைப் பயன்படுத்தப்படும். சமாஜ்வாதி மூத்த தலைவர் சிவபால் சிங் யாதவுக்கு பிரசார மேடையில் ஒரு நாற்காலி கூட கொடுக்கவில்லை. அவரைப்பார்த்தால் பாவமாக இருக்கிறது. இது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாஜக தான் காரணம் என தேர்தலுக்கு முன்பிருந்தே இந்த பிரசாரத்தைக் கையிலெடுத்தது பாஜக. அயோத்தியில் தான் உபி முதல்வர் யோகி போட்டியிடவிருந்தார். அங்கு கோயிலுக்கு அருகே கடை நடத்திவந்தவர்களிடம் நிலம் பெறப்பட்டதால், அதிருப்தி நிலவியது. அதனால் யோகி கோரக்பூரில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

கோவா தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!
இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?