பிடி இறுகுகிறது: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு எதிராக சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ்

Published : Feb 18, 2022, 02:52 PM ISTUpdated : Feb 18, 2022, 03:19 PM IST
பிடி இறுகுகிறது: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு எதிராக சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ்

சுருக்கம்

தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா வெளிநாட்டுக்கு எங்கும் தப்பிச் செல்ல முடியாத வகையில் லுக்அவுட் நோட்டீஸை சிபிஐ இன்று பிறப்பித்துள்ளது.

தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா வெளிநாட்டுக்கு எங்கும் தப்பிச் செல்ல முடியாத வகையில் லுக்அவுட் நோட்டீஸை சிபிஐ இன்று பிறப்பித்துள்ளது.

என்எஸ்இ ரகசிய தகவல்களைப் பகிர்ந்த விவகாரம், முறைகேடுகள் குறித்து விரைவில் சிபிஐ விசாரணை நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியானநிலையில் இந்த லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணா தவிர்த்து, ஆனந்த் சுப்பிரமணியன், என்எஸ்இ முன்னாள்இயக்குநர் ரவி நரேன் ஆகியோருக்கும் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் என்ற மிக முக்கிய பதவிக்கு ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன என்றும்  ஆண்டுக்கு 3 முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு, ரூ.2.31 கோடியாக அதிகரிக்கப்பட்டது என்றும் புகார்கள் வந்தன.

இது குறித்து பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்புான செபி விசாரணை நடத்தியதில்  ராமகிருஷ்ணா, கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் உள்ள ஒரு சாமியாரின் ஆலோசனையின்படிதான் நடந்துள்ளார். அவரின் அறிவுரைகள், கட்டளைப்படிதான் தேசியப் பங்குச்சந்தையையும் நடத்தியுள்ளார். 

தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.5 கோடிவரை இழப்பு ஏற்படுத்தியது, விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை சித்ரா ராமகிருஷ்ணா செய்ததை செபி கண்டுபிடிக்கப்பிடித்தது. இதையடுத்து, முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன், ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன், ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் அபராதமாக செபி விதி்த்தது

இதற்கிடையே என்எஸ்இ தொடர்பான ரகசிய ஆவணங்களை பங்குச்சந்தையில்பட்டியலிடுவதற்கு முன்பே சில நிறுவனங்களுக்கு தகவல்களை அளித்து, அதன் மூலம் கோடிக்கணக்கில் ஆதாயத்தை சித்ரா ராமகிருஷ்ணா பார்த்திருக்கலாம் என்று செபி குற்றம்சாட்டுகிறது. இதன் அடிப்படையில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளில் நேற்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சித்ரா ராமகிருஷ்ணா விவாகரத்ததை சிபிஐ விசாரணைக்காக விரைவில் எடுக்கும் என்று தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன், ரவி நரேன் ஆகியோருக்கு எதிராக லுகுஅவுட் நோட்டீஸை சிபிஐ பிறப்பித்திருப்பதாகத் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?